ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்.7) கோலாகலமாகத் தொடங்கியது.
நேற்றைய போட்டியில் இந்தியா – அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல் அணியின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார்.
“இந்த ஆடுகளத்தை கணிக்கவே முடியவில்லை. முக்கியமான சில வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டோம்.
அதுதான் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது.