IND vs WI:”வயிற்றுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குற மாதிரி இருக்கும்; ஆனா.!” – சூர்யா குமார் யாதவ் | Indian Captain suriya kumar yadav speech after India WI match

Spread the love

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான Do or Die மேட்சில், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் 196 என்ற இமாலய இலக்கை துரத்தி வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்திருக்கிறது இந்திய அணி.

இந்த வெற்றி குறித்து கேப்டன் சூர்யா குமார் யாதவ் பேசுகையில்

“நிச்சயமா இது ஒரு அருமையான உணர்வு. இந்த போட்டி காலிறுதி ஆட்டம் மாதிரி தான் இருந்தது. அந்த அழுத்தமான சூழ்நிலையில், எங்கள் வீரர்கள் காட்டிய மனஉறுதியே பெரிய விஷயம்.

எல்லாரும் திட்டமிட்டபடியே பத்துவீசியதாக நான் நினைக்கிறேன். 200 ரன்கள், இந்த மைதானத்தில் எப்போதும் சேஸ் பண்ணக்கூடிய நல்ல ஸ்கோர் தான். மைதானத்தில் இருந்த பனி காரணமா பந்து பேட்டுக்கு கொஞ்சம் எளிதாக வந்தது. அதனால் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு போகணும்னு தான் எங்களோட திட்டம்.

ஒரு அணியாக இங்க இருப்பதில் ரொம்ப சந்தோஷம். முதல் போட்டியிலிருந்து நாங்க விளையாடிய விதத்தைப் பார்த்தா, மும்பைக்குப் போக தகுதி இருக்குன்னு நினைக்கிறேன். ஆனா இப்போ அதைப்பத்தி யோசிக்க மாட்டோம். பிளைட் எடுத்து மும்பை போவோம், அங்க போயி என்ன பண்ணணும்னு பார்க்கலாம்.

மக்களிடம் எதிர்பார்ப்புகள் எப்போதும் இருக்கும். ஆனால் அதே நேரம், மைதானத்தில் அணியாக என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். எங்கள் வீரர்களிடம் இதையே தான் சொன்னேன். ஆம், அழுத்தம் இருக்கும், மைதானத்திற்கு வரும் எல்லோருக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும், வீட்டில் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஆட்டம் வரும்போது, நீங்கள் மேலும் தைரியமாக இருக்க வேண்டும், உங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும். அழுத்தத்தில் நேர்மறையாக இருக்க வேண்டும். அதை நாங்கள் நன்றாகவே செய்தோம் என நினைகிறேன்.

நெருக்கடி இருக்கும், வயிற்றுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குற மாதிரி ஒரு பதட்டம் இருக்கும். ஆனா அந்த உணர்வுகளை நாம் எப்படி கையாளுறன்னு தான் முக்கியம். நாம் இந்தியாவில் விளையாடுகிறோம். சொந்த மண்ணில் சொந்த அணி விளையாடுகிறது. அதிக அழுத்தம் இருக்கும்தான். ஆனால் அதை எப்படி புரிந்துகொள்கிறோம், எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதே முக்கியம்.” என்றார்,

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *