IND vs ZIM : “ஜிம்பாப்வே ஓட இந்த டெக்னிக் ரொம்ப இம்ப்ரசிவ்-ஆ இருந்துச்சு” – சூர்யகுமார் யாதவ் | Surya kumar Yadav speec after match against Zim

Spread the love

சென்னை M.A. சிதம்பரம் மைதானத்தில் நடந்து முடிந்த இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியில், 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி, 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்குப் பின்னர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், “அஹமதாபாத் மேட்ச்ல என்ன நடந்துச்சுங்கிறதை நாங்க அதிகமா யோசிக்கல. எங்களோட வீடியோ அனலிஸ்ட் கொடுத்த பாசிட்டிவ் விஷயங்களை வச்சு தெளிவா களமிறங்கினோம்.

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்
Ajit Solanki

டாப் ஆர்டர்ல இருந்து ஏழாவது இடம் வரை எல்லாரோட பங்களிப்பும் சிறப்பா இருந்துச்சு. பந்துவீச்சுல இன்னும் கொஞ்சம் கச்சிதமா இருந்திருக்கலாம். அடுத்ததா வெஸ்ட் இண்டீஸ் கூட விளையாடும்போது சின்ன சின்ன தவறுகளை சரி பண்ணிக்குவோம்.

ஜிம்பாப்வே வீரர்களைப் கண்டிப்பா பாராட்டணும். அவங்க பேட்டிங் அருமையா இருந்துச்சு. பவர் பிளேயை சரியா பயன்படுத்தி, அப்புறம் வேகமா ரன் ஏத்துனது ரொம்ப இம்ப்ரசிவ்-ஆ இருந்துச்சு.

இப்போதைக்கு ஒரு நாள் ஓய்வு. அப்புறம் கொல்கத்தா போயி, வெஸ்ட் இண்டீஸ் மேட்சுக்கான பிளானை ரெடி பண்ண வேண்டியதுதான்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *