ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. ஜிம்பாப்வே நிர்ணயித்த 115 ரன்கள் எடுக்க முடியாமல் 19.5 ஓவரில் 102 ரன்கள் மட்மே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் ஐ.பி.எல். விளையாட்டில் ஜொலித்த வீரர்கள் மீது விமர்சனங்கள் எழுந்தது.
2-வது போட்டி
இந்த நிலையில் ஜிம்பாப்வேக்கு எதிரான 2&வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்திய அணியில் 11 பேர் கொண்ட வீரர்களில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு இடம் கிடைத்து இருந்தது. டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.கேப்டன் சுப்மன் கில் 4 பந்தில் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா,ருத்ராஜ் கெய்க்வாட் சேர்ந்து ஜிம்பாப்வே வீரர்களின் பந்துவீச்சை நொறுக்கி தள்ளினர். இதனால் பந்து பவுண்டரி,சிக்சர் களாக பறந்தன. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் திணறினர்.
அபிஷேக்சர்மா சதம்
குறிப்பாக அபிஷேக் சர்மாக கடந்த போட்டியில் முட்டையில் ரன் எதுவும் எடுக்கமால் இருந்ததற்கு இந்த போட்டியில் பழிவாங்கும் விதத்தில் ஆடினார். அவர் 46 பந்துகளில் சதம் விளாசினார். டி20 போட்டியில் அதிவேக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் 3 இடத்தை பிடித்ததார். இதற்கு முன்பு ரோகித்சர்மா 35 பந்தில் சதம் அடித்து முதல் இடத்தை பிடித்து உள்ளார்.
இதற்கு அடுத்த இடத்தில் சூர்யகுமார் யாதவ் 45 பந்திலும், இதைத்தொடர்ந்து கே.எல்.ராகுல், அபிஷேக் சர்மா ஆகியோர் 46 பந்திலும் சதம் அடித்து இருக்கிறார்கள்.
இதேபோல் இந்திய அணிக்காக மிக இளம் வயதில் டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலிலும் அபஷேக் சர்மா 4 இடத்தை பிடித்து உள்ளார். ஜெய்ஸ்வால் 21 வயது 279 நாளிலும், சுப்மன் கில் 23 வயது 146 நாளிலும், சுரேஷ்ரெய்னா23 வயது 156 நாளிலும், அபிஷேக் சர்மா 23 வயது 307 நாளிலும் சதம் விளாசி உள்ளனர்.
ருத்ராஜ் கெய்க்வாட்- ரிங்கு சிங் அசத்தல்
சதம் அடுத்த பந்தில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரிங்கு சிங்கும் தனது பங்கிற்று பந்துகளை சிதறிடித்தார். இதனால் மைதானத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் விழிபிதுங்கி நின்றனர்.ருத்ராஜ் கெய்க்வாட்டும் அரை சதம் விளாசினார். அவர் 47 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார்.
ரிங்கு சிங் 22 பந்தில் 48 ரன்கள் பறக்க விட்டார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 234 ரன்கள் குவித்தது.
235 ரன்கள் இலக்கு
இதைத்தொடர்நது 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஜிம்பாப்வே அணி தனது பேட்டிங்கை தொடர்ந்தது. ரன் அடிக்கும் வேகத்தில் ஜிம்பாப்வே வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அந்த அணியில் வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாட வில்லை. இவர்களில் வெஸ¢ல¤ மாதேவேரே 43 ரன்கள், பிரையன் பென்னட் 26 ரன்கள், லூக் ஜாங¢வே 33 ரன்னும் அதிபட்சமாக எடுத்தனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்குகளில் வெளியேறினர்.
134 ரன்கள் மட்டுமே
இந்திய பவுலர்களில் ஆவேஷ்கான், முகேஷ்குமார் ஆகியோர் அபாரமாக பந்து வீசி தலா 3 விக்கெட் வீழ்த்தினார். ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டும்,வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 18.4 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.
100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இதனால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் போட்டியில் பெற்ற தோல்விக்கு இந்தியா பழிதீர்த்துக் கொண்டது. மேலும் இளம் வீளர்கள் தங்கள் மீதான விமர்சனத்திற்கும் பேட்டால் பதில் அளித்து உள்ளனர். தமிழக வீரர் சாய்சுதர்சனுக்கு பேட்டிங்களில் களத்தில் இறங்கும் வாய்ப்பு கிடைக்க வில்லை.