சென்னை,ஜன.18-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, வங்கதேசமும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இவற்றில் இந்தியா, பாகிஸ்தான் தவிர மற்ற நாடுகளின் அணி வீரர்களின் விபரம் அறிவிக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. அதன்படி இந்திய அணி குறித்த அறிவிப்பை, இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கர் இன்று அறிவித்தார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் பும்ரா,ஷமி இடம் பிடித்து உள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விபரம் வருமாறு:-
ரோகித் சர்மா(கேப்டன்)
சுப்மன்கில்(துணை கேப்டன்)
ஜெய்ஸ்வால்
வீராட்கோலி
ஸ்ரேயஸ் அய்யர்
கே.எல்.ராகுல்
ஹார்த்திக் பாண்ட்யா
அக்ஷர்பட்டேல்
வாஷிங்டன் சுந்தர்
ரிஷப்பண்ட்
குல்தீப் யாதவ்
பும்ரா
முகமது ஷமி
அக்ஷர்தீப் சிங்
ரவீந்திர ஜடோஜா.