கிரிக்கெட்:
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இன்று 2-வது 50 ஓவர் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அவிஷ்க பெர்னாண்டோ,கமிந்து மெண்டிஸ் ஆகியோர் அதிகபட்சமாக தலா 40 ரன்கள் எடுத்தனர். துனிஷ் வெல்லலகே 39 ரன்கள், குஷால மெண்டிஸ் 30 ரன்கள் எடுத்தனர். இந்திய பந்து வீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட், குல்தீப்யாதவ் 2 விக்கெட், சிராஜ் அக்ஷர் பட்டேர் ஆகியோர் தலா ஒருவிக்கெட்டும் வீழ்த்தினர்.
241 ரன்கள் எடுத்தால்வெற்றி
இதைத்தொடர்ந்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது. முதல்விக்கெட்டுக்கு 13.3 ஓவரில் 97 ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 64 ரன் எடுத்தார். இதன் பின்னர் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாட வில்லை. விக்கெட்டுகள் அடுத்தடுத்து சீட்டு கட்டுகள் போல் சரிந்தன.
குறிப்பாக வாண்டர்ஷே பந்து வீச்சில் அனல் பறந்தது. அவரது பந்தை கணிக்க முடியாமல் இந்நிய வீரர்கள் திணறினர். ரோகித்சர்மா, கில், வீராட்கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகிய முதல் 6 வீரர்களையும் அடுத்தடுத்து அவுட்டாக்கி கடும் நெருக்கடி கொடுத்தார். இதன் பின்னர் அக்ஷர் பட்டேல்-வாஷிங்டன் சுந்தர் ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி ரன்கணக்கை மெதுவாக உயர்த்தினர். பின்னர் இந்த ஜோடியும் பிரிந்தது. அசலங்காவும் தனது பங்கிற்கு சுழற்பந்து வீச்சாள் கலக்கினார். மொத்தத்தில் ஆடுகளம் முழுவதும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.
இந்தியா தோல்வி
முடிவில் 42.2 ஓவரில் இந்திய அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் சுப்மன்கில் 35ரன், வீராட்கோலி 14 ரன், கே.எல்.ராகுல், ஷிவம் டூபே ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும், அக்ஷர் பட்டேர் 44 ரன், ஷ்ரேயர் அய்யர் 7 ரன், வாஷிங்க்டன் சுந்தர் 15 ரன், குல்தீப் யாதவ் 7 ரன், சிராஜ் 4 ரன், அஷ்ரப்தீப்சிங் 3 ரன் எடுத்தும் அவுட்டானார்கள்.
இலங்கை பந்து வீச்சாளர்ககளில் வாண்டர்ஷே 6 விக்கெட், அசலங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஏற்கனவே நடந்த முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை வெற்றி பெற்றதால் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது ஒருநாள் போட்டி வருகிற 7-ந்தேதி நடைபெற உள்ளது.