இந்தியா- அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி

Photo1
Spread the love

இந்தியா- அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் தொடங்கியது

புதுடெல்லி:

Pho02

யுத் அப்யாஸ் -2024 எனும்  இந்தியா- அமெரிக்கா இடையேயான 20-வது கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் இன்று தொடங்கியது.

இந்தப் பயிற்சி செப்டம்பர் 22 வரை நடைபெறும். 2004 முதல் இந்தியாவிலும், அமெரிக்காவிலுமாக ஆண்டுதோறும் இப்பயிற்சி மாறி மாறி நடைபெறுகிறது.

மகாவிஷ்ணு சொற்பொழிவுக்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் வந்தது எப்படி?: சமூக வலைதளத்தில் வைரல் பதிவு

ராணுவப் பயிற்சி

இந்தப் பயிற்சியில் இந்திய தரப்பில் இருந்து ராஜ்புத் படைப்பிரிவு உட்பட  பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 600 ராணுவ வீரர்கள்  பங்கேற்றுள்ளனர். அமெரிக்க ராணுவத்தின் அலாஸ்காவைச் சேர்ந்த படைப்பிரிவுகளின் 600 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Photo4

Ph03

ஐ நா சபை சாசனத்தில் 7-வது பிரிவின் கீழ், பயங்கர வாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருதரப்பு கூட்டு ராணுவ திறன்களை  அதிகரிப்பது இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

நடைமுறை உத்திகள், தொழில்நுட்பங்கள், கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விதிமுறைகள் ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்ள இந்தப் பயிற்சி உதவும். மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான  உறவுகள் விரிவாக்கம் ஆகியவற்றுக்கும் இந்தப் பயிற்சி உதவும்.

நடிகர் ஜெயம் ரவி மனைவியை பிரிந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *