ஆசிய கோப்பை டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்த்து இந்திய மகளிர் அணி விளையாடியது.
முதலில் விளையாடி பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்மிரிதி மந்தனா 45 ரன்னும், ஷபாலி வர்மா 40 ரன்னும் எடுத்தனர்.