புதுதில்லியிலுள்ள ரஷிய தூதரகம் சனிக்கிழமை(ஆக. 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷிய ராணுவத்தில் சேவையாற்றி உக்ரைனுடனான சண்டையில் உயிரிழந்த இந்தியர்களுக்காக அவர்களது குடும்பங்களுக்கும் இந்திய அரசுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல், ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்தியா உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த குடிமக்களை தங்கள் நாட்டு ராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்திவிட்டது. மேலும், இந்தியர்களை தங்கள் நாட்டு ராணுவத்தில் சேர்ப்பது குறித்து ரஷிய அரசு எவ்வித பிரசாரங்களிலும் ஈடுபடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷிய ரணுவத்தில் பணிபுரியும் இந்தியர்களை விரைந்து விடுவிப்பதில் இந்தியா- ரஷியா ஆகிய இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.