இந்தியாவின் விண்வெளி நிலையம் 2035-ம் ஆண்டுக்குள் அமைக்க திட்டம்

23 65216811bc11e
Spread the love

புதுடெல்லி:
விண்வெளித் துறை இணைஅமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ‘ஓபன்’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

புதிய விண்வெளிக் கொள்கை

விண்வெளித் துறையை மேம்படுத்த பிரதமர்நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கடந்த காலத்தின் தடைகள் உடைக்கப்பட்டுள்ளது. இதற்கான பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சாரும்.

Spcae
புதிய விண்வெளிக் கொள்கை ஒரு திருப்புமுனை தருணம்.முதன்முறையாக, இஸ்ரோவின் நடவடிக்கைகளில் தனியார் துறை பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டில், விண்வெளித் துறையில் ஒரு இலக்க புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன.இப்போது அது 300-ஐ தொட்டுள்ளது.
அக்னிகுல் காஸ்மோஸ் என்ற புத்தொழில் நிறுவனம் இஸ்ரோ வளாகத்தில் தனியார் ஏவுதளத்தை அமைத்துள்ளது. ஸ்கைரூட் நிறுவனம் முதல் தனியார் துணை சுற்றுப்பாதை ஏவுதலை மேற்கொண்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் போன்ற சர்வதேச நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை அணுகி வருகின்றன.
2023&ஆம் ஆண்டில், விண்வெளித்துறையில் ரூ.1000 கோடி முதலீடு பெறப்பட்டது.அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளி பொருளாதாரம் 5 மடங்கு அல்லது சுமார் 44 பில்லியன் டாலர் என்ற அளவில் வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்பட என்ன காரணம்?
ககன்யான்

விண்வெளித் துறையில் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகவும், வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கக்கூடிய திறமைசாலிகளுக்கு இங்கேயே வாய்ப்புகள் கிடைக்கக் கூடும். தற்போது வேலைவாய்ப்புக்கான வழிகள் மட்டுமின்றி, புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.அடுத்து வரவிருக்கும் முக்கியமான இஸ்ரோ திட்டமாக “ககன்யான்” உள்ளது.
கோவிட் காரணமாக தாமதமான இந்த திட்டம் அடுத்த ஆண்டு நிறைவேறும் என்றும் கூறினார். திட்டமிட்டபடி பணிகள் நடைபெற்றால், 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஒரு இந்திய நபரை விண்வெளிக்கு அனுப்ப முடியும்.

Space02

விண்வெளி நிலையம்

இந்தியாவின் விண்வெளி நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.2040-ம் ஆண்டுக்குள் நிலவில் முதல் இந்தியர் தரையிறங்கும் பெருமை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *