Indigo: இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு DGCA ‘Show-cause’ நோட்டீஸ் – காரணம்‌ என்ன?|DGCA issues Show cause notice to Indigo CEO

Spread the love

இந்த நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு “விளக்கம் கோரல் அறிவிப்பாணை (Showcause Notice)’ அனுப்பியுள்ளது.

அந்த அறிவிப்பாணையில், “தலைமை நிர்வாக அதிகாரியாக, விமானப் பயணங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு.

தகுந்த ஏற்படுகளைச் செய்யவேண்டிய பொறுப்பிலிருந்து தவறிவிட்டீர்கள்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த அறிவிப்பாணைக்கு பதிலளிக்கவேண்டும். இல்லையென்றால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த அறிவிப்பாணைக்கு பதிலளிக்கப்படவில்லை என்றால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *