சென்னை விமான நிலையம் ஸ்பாட் விசிட்
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் நிலைமை என்னவாக இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள கள ஆய்வு செய்திருந்தோம்.
உள்ளே போக முடியாது, போனால் வெளியே வரவும் முடியாது! இப்போதைக்கு இதுதான் சென்னை விமான நிலையத்தின் நிலைமையாக இருக்கிறது.
பல மணி நேரங்களாக ஏன் சில நாட்களாக கூட சென்னை விமான நிலையத்துக்குள் சிக்கி அவஸ்தைப் படுகிறார்கள் பொதுமக்கள்.

அவதியுறும் பயணிகள்
சிங்கப்பூரிலிருந்து கனெக்டிங் பிளைட் மூலம் தனது சொந்த ஊருக்கு திரும்ப வந்த ஒரு பெண் தனது குடும்பத்துடன் இங்கேயே சிக்கிக் கொண்டிருக்கிறார்.
சபரிமலைக்கு விமானம் மூலம் முன்பதிவு செய்ய இருந்த பக்தர்கள் அனைவரும் இப்பொழுது சபரிமலை செல்ல முடியாமல் தவித்துக் கிடக்கிறார்கள்.
பொதுமக்களின் பிரச்னைகளுக்கு அதிகாரிகள் கைவிரிக்க கிரவுண்ட் ஸ்டாஃப்கள் எனப்படும் உள்நிலை ஊழியர்கள் பொதுமக்களிடம் சிக்கி அவஸ்தைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.