திணறிய Indigo – விமான கட்டணம் அதிகரிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ, புதிய விமானப் பணி நேர வரம்பு (Flight Duty Time Limitation – FDTL) விதிமுறைகள் காரணமாகப் பணி அட்டவணையைச் சீரமைக்க முடியாமல் திணறியதால், கடந்த சில நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பயணிகளின் துயரத்தை மேலும் அதிகரிப்பது போல, விமான டிக்கெட்டுகளின் விலை அசுர வேகத்தில் உயர்ந்தது. இந்தக் குழப்பமான சூழ்நிலையால், டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கான உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகரித்தன. எடுத்துக்காட்டாக, டெல்லி-மும்பை நேரடி விமான டிக்கெட்டுகளின் விலை ₹65,460 வரை உயர்ந்தது. ஒற்றை நிறுத்தம் கொண்ட விமானங்களின் விலை ₹38,376 முதல் ₹48,972 வரை விற்கப்பட்டது.