ஐ.சி.யூ.வில் செந்தில் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை

Senthiil1 Down 1721566885
Spread the love

தமிழக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி இருந்தார். இவர், கடந்த ஆண்டு ஜுன் 14ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

Senthilbalaji

செந்தில் பாலாஜி கைது

கடந்த 2014ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது பணிக்கு அவர் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து கைதான செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.முன்னதாக அமலாக்கத்துறை அவரை கைது செய்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. பின்னர் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1135994
FILE PHOTO

புழல் சிறையில்

செந்தில் பாலாஜி தனது உடல்நிலையை காரணம் காட்டி பலமுறை ஜாமீன் கோரினார். ஆனால் அமலாக்கத்துறை எதிர்ப்பால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

உச்ச நீதி மன்றத்திலும் இந்த வழக்கு இன்னும் நடந்து வருகிறது. இதனால் செந்தில் பாலாஜி தொடர்ந்து சிறையிலேயே இருந்து வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு இடைக்கால பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம்

நெஞ்சுவலி

இந்நிலையில் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று மதியம் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ஐ.சி.யூ.வில்

அங்கு அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து தேவையான சிகிச்சை அளித்து வருகின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு நாங்களும் ரெடி-எடப்பாடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *