இந்த நி்லையில் வங்கதேச வீரரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில் பிசிசிஐ-யும் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கொல்கத்தா அணிக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் கொல்கத்தா அணி முஸ்தஃபிசுர் ரஹ்மானை விடுவித்திருக்கிறது. இதுதொடர்பாக கொல்கத்தா அணி வெளியிட்டிருக்கும் பதிவில், “தற்போது நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இருந்து முஸ்தஃபிசுர் ரஹ்மானை விடுவிக்கக் கோரி பிசிசிஐ அறுவுறுத்தியிருக்கிறது.

அந்த அறிவுறுத்தலின் பேரில், முறையான நடைமுறைகளையும் ஆலோசனைகளையும் பின்பற்றி அவரை அணியிலிருந்து விடுவித்திருக்கிறோம்.
ஐபிஎல் விதிமுறைகளுக்கு ஏற்ப கொல்கத்தா அணிக்கு மாற்று வீரரை தேர்வு செய்ய பிசிசிஐ அனுமதி வழங்கி இருக்கிறது” என்று பதிவிட்டிருக்கின்றனர்.