ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளருக்கு வழங்கப்படும் உயரிய கௌரவம் “பர்பிள் கேப்’.
இந்தத் தொப்பியை அணிவது ஒவ்வொரு பந்துவீச்சாளரின் கனவு. ஆனால், ஐபிஎல் வரலாற்றையே புரட்டிப் போட்ட பல ஜாம்பவான்களுக்கு இந்த மகுடம் மட்டும் இன்றுவரை எட்டாக்கனியாகவே இருக்கிறது. அப்படி ‘பர்பிள் கேப்’ வெல்லாத ஜாம்பவான்களின் பட்டியல் இங்கே…

ஜஸ்பிரித் பும்ரா
உலகின் மிகச்சிறந்த ‘டெத் ஓவர்’ (Death Overs) பந்துவீச்சாளர் என்று போற்றப்படும் பும்ரா, இதுவரை ஒருமுறைக்கூட பர்பிள் கேப் வெல்லவில்லை என்பது கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய ஆச்சர்யம்.
2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பும்ரா மிகச் சிறப்பாகச் செயல்பட்டு 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும், அதே சீசனில் ககிசோ ரபாடா 30 விக்கெட்டுகள் எடுத்து இவரை முந்தினார்.
பேட்டர்கள் பும்ராவின் ஓவர்களில் விக்கெட் கொடுக்காமல் ‘தப்பித்தால் போதும்’ என்ற எண்ணத்தில் நிதானமாக விளையாடுவதால், அவரது எகானமி (Economy) குறைவாக இருப்பதாலும், விக்கெட்டுகள் எண்ணிக்கை சில நேரங்களில் குறைந்துவிடுகிறது.