IPL 2026 Auction: '14 கோடிக்கு சென்னை வாங்கிய 19 வயது இளம் வீரர்!' – யார் இந்த கார்த்திக் சர்மா?

Spread the love

அபுதாபியில் நடந்து வரும் மினி ஏலத்தில் சென்னை அணி சர்ப்ரைஸுக்கு மேல் சர்ப்ரைஸாக கொடுத்து வருகிறது. வழக்கமாக இளம் வீரர்களை நோக்கி பார்வையைத் திருப்பாத சென்னை அணி, இந்த முறை பிரஷாந்த் வீர் என்ற வீரரை ரூ. 14.20 கோடிக்கு வாங்கியிருந்தது. உடனடியாக கார்த்திக் சர்மா என்கிற வீரரையும் போட்டி போட்டு 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது. யார் இந்த கார்த்திக் சர்மா?

Karthik Sharma
Karthik Sharma

ராஜஸ்தானைச் சேர்ந்த கார்த்திக் சர்மாவுக்கு 19 வயதே ஆகிறது. அதிரடி பேட்டராக அறியப்பட்ட இவர் ஃபினிஷர் ரோலில் மிகச்சிறப்பாக தன்னை பொசிஷன் செய்து வருகிறார். கடந்த ரஞ்சி சீசனில் உத்ரகாண்ட்டுக்கு எதிரான அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து அசத்தியிருந்தார்.

அதேமாதிரி, கடந்த விஜய் ஹசாரே தொடரிலும் 400+ ரன்களைச் சேர்த்து ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்களை எடுத்த வீரராக வந்தார். 19 வயதுக்குட்பட்ட ராஜஸ்தானின் இளையோர் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

Karthik Sharma
Karthik Sharmax

தோனிக்கு வயதாகிவிட்டது. முன்பைப் போல போட்டிகளை முடித்துக் கொடுக்கும் நிலையில் அவர் இல்லை. அதனால் அவருக்கு உதவியாக கீழ் வரிசையில் கார்த்திக்கை இறக்கி முயற்சி செய்து பார்க்கலாம் என்பது சென்னை அணியின் திட்டமாக இருக்கலாம். நீண்டகால அடிப்படையில் நல்ல தேர்வாகவும் இருப்பார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *