Irfan: 13 வருட இடைவெளி, 12 கிலோ எடை குறைப்பு – சீரியலுக்குத் திரும்பிய ‘சரவணன் மீனாட்சி’ இர்ஃபான்! | Irfan: After a gap of 13 years, 12 kg weight loss – ‘Saravanan Meenakshi’ Irfan returns to the serials

Spread the love

ஜி தமிழ் சேனலில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கிற “வாகை சூட வா’ சீரியல் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டிவிக்குத் திரும்பியிருக்கிறார் நடிகர் இர்ஃபான்.

‘கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் இர்ஃபான். அந்தச் சீரியலில் ஓரளவு அறிமுகம் கிடைத்ததும், தொடர்ந்து ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் கமிட் ஆனார்.

அந்தச் சீரியலின் இரண்டாவது சீசனில் ரச்சிதாவுடன் முதன் முதலில் ஜோடி சேர்ந்தது இவர்தான். இர்ஃபான் – ரச்சிதா காம்பினேஷனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஒரு கட்டத்தில் சினிமா ஆர்வத்தில் டிவியில் இருந்து இவர் ஒதுங்கிய பிறகே, அந்த இடத்துக்கு பிரேம், அவருக்குப் பிறகு ரியோ ஆகியோர் நடித்தனர்.

சினிமாவில் ‘சுண்டாட்டம்’ என்ற படத்தில் நடித்தார். வணிக ரீதியாகப் பேசப்படாவிட்டாலும் படம் மோசமில்லை.

அதன் பிறகு இயக்குநர் சேரனுக்கு வில்லனாக ‘ராஜாவுக்கு செக்’ என்ற படத்தில் நடித்தார். வில்லன் கேரக்டர் செட் ஆகிறது என மீடியாக்கள் எழுதின.

ஆனாலும் அதன் பிறகு சினிமாவில் பார்க்க முடியவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *