இந்தியாவில் நடந்த கடற்பயிற்சிக்காக வந்த… கிட்டத்தட்ட இந்தியாவிற்கு அருகே உள்ள கடற்பகுதியில் (இலங்கை கடற்பரப்பில்) ஈரான் கப்பலான IRIS தேனாவை மூழ்கடித்துள்ளது அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்.
ஆனால், இது குறித்து மத்திய அரசு இதுவரை வாயே திறக்கவே இல்லை.
“1. இந்தியாவின் விருந்தாளியான ஈரான் கப்பல் இங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இதற்கு ஏதேனும் கருத்தோ, கண்டனமோ தெரிவிக்கப்படவில்லை. பிரதமர் மோடி அமைதியாகவே இருக்கிறார்.
சொந்த கொல்லைப்புறத்தில் நடக்கும் ஒரு விஷயத்திற்கு எதிர்வினையாற்றாதபோது, MAHASAGAR பற்றியும், இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு வழங்குநராக இருக்கிறீர்கள் என்றும் ஏன் பாடம் எடுக்கிறீர்கள்?
2. 1,100 மாலுமிகளுடன் இந்தியாவின் கொடி கொண்ட 38 வணிகக் கப்பல்கள் ஹார்மோஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ளன.
அங்கே கேப்டன் ஆஷிஷ் குமார் உள்ளிட்ட இரண்டு மாலுமிகள் இறந்துள்ளனர். அங்கே ஏன் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை?
இன்னும் 25 நாள்களுக்குத்தான் கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது என்று கூறுகிறீர்கள்.