டெல்லி:
டெல்லியில் செய்தியாளர்களுடன் பேசிய லெபனான் தூதர் ராபி நர்ஷ் கூறியதாவது,
”கடந்த இரவில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக போதிய அளவிலான தகவல்களை நான் இன்னும் பெறவில்லை. ஆனால் ஒன்றைமட்டும் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் புரட்சியாளரைக் கொல்லலாம்; ஆனால் புரட்சியை ஒருபோதும் கொல்ல முடியாது என மகாத்மா காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார். புரட்சிக்கான காரணங்கள் தனியொரு மனிதனுக்கானது அல்ல.
இதையும் படிக்க | ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் கடைசி நிமிடங்கள்.. வெளியான விடியோ
சின்வார் ஹமாஸ் படைக்குத் தலைவர் மட்டும் அல்ல. எல்லைப் பகுதி ஆக்கிரமிப்பை எதிர்க்கும் உரிமை அவர்களுக்கு (ஹமாஸ்) இருப்பதால் பாலஸ்தீன போர் தொடரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தங்கள் மண்ணில் கண்ணியமாக வாழ அவர்களுக்கு உரிமை உண்டு. உத்திரவாதமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதற்காக உரிமை அவர்களுக்கு உள்ளது. சுதந்திர அரசைப் பெறுவதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது” எனக் குறிப்பிட்டார்.