Jana Nayagan: "ஏதோ ஒரு விஷயம் சரியா இல்லைனுதான் சென்சார் போர்டு கட் கொடுக்கிறாங்க!" – சரத்குமார்

Spread the love

விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது.

ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

ஜனநாயகன் | விஜய்
ஜனநாயகன் | விஜய்

தணிக்கைத் துறை அதிகாரிகள் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படத்தை முடக்குகிறார்கள் என பல்வேறு தரப்புகளிலிருந்து தணிக்கைத் துறைக்கு கண்டனங்கள் வலுத்தன.

இந்நிலையில் சரத்குமார் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசியிருக்கிறார்.

சரத்குமார் பேசுகையில், “சென்சார் போர்டு அவங்க வேலையைப் பார்த்துட்டு இருக்காங்க. அவங்க இதுக்கு முன்னாடி எவ்வளவோ படங்களை நிறுத்தியிருக்காங்க. ‘தக் லைஃப்’ படத்துக்கு அது நடந்திருக்கு.

ஜெயலலிதா அம்மா ப்ரீயடிலும் விஜய்க்கு அது மாதிரி நடந்திருக்கு. அதனால, இது மாதிரிலாம் நடக்கிறது அரசியல் கிடையாது.

எல்லாமே அரசியலாகத்தான் நடக்குதுங்கிற எண்ணத்தை முதல்ல மாத்தணும். அந்த படத்துல ஏதோ ஒரு விஷயம் சரியா இல்லைனுதான் சென்சார் போர்டு கட் கொடுக்கிறாங்க.

நடிகர் சரத்குமார்

மக்களை முன்னிறுத்தித்தான் சென்சார் போர்ட்ல உறுப்பினர்கள் படத்தைப் பார்க்கிறாங்க. அரசியல்வாதிகள் அங்கு கிடையாது.

‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் ஆகணும்னு ஆசை அனைவருக்கும் இருக்கும். படமெடுக்கிறது ரொம்ப கஷ்டம், அது ரிலீஸ் ஆகணும். ஆனா, அது சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்கணும்.

எதிர்க்கட்சிகளுக்கு வேற வேலை இல்ல. எதை அரசியல்படுத்தணும், எதை மக்களுக்கு கொண்டு போகணும்னு தெரியல. நம்ம நாடு ஜனநாயக நாடு. அதை விட்டுட்டு ‘ஜனநாயகன்’ சினிமாவைப் பத்தி பேசுறதுதான் உங்களுக்கு முக்கியமா தெரியுது!?” எனக் கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *