JanaNayagan Audio Launch: விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா அப்டேட்ஸ் இங்கே! |Vijay’s ‘Jananayagan’ audio launch event updates are here!

Spread the love

இந்த ‘தளபதி கச்சேரி’ கான்சர்ட்டில் எஸ்.பி.பி. சரண், விஜய் யேசுதாஸ், அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா, சைந்தவி, திப்பு எனப் பல பின்னணிப் பாடகர்களும் பாடவிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து, இசை வெளியீட்டு விழா விஜய்க்கு வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் என மூவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கிறார்கள்.

Jana Nayagan Audio Launch

Jana Nayagan Audio Launch

இவர்களோடு சிலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விஜய் தங்கியிருக்கும் ஹோட்டலிலிருந்து நிகழ்வுக்குப் புறப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய்.

கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.

‘தளபதி கச்சேரி’ கான்சர்டை நடிகர் ரியோ ராஜும், தொகுப்பாளர் அஞ்சனாவும் தொகுத்து வழங்குகிறார்கள். இசை வெளியீட்டு விழாவை ஆர்.ஜே.விஜய்யும், வி.ஜே. ரம்யாவும் தொகுத்து வழங்கவிருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *