“2008-ம் ஆண்டு பங்குச்சந்தை பெரும் சரிவைக் கண்ட சூழலைப் போல, இப்போதும் சூழல் நிலவுகிறது’ என்று ஜேபி மோர்கன் சேஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் சமீபத்தில் பேசியிருந்தார்.
இது பங்குச்சந்தையில் இப்போது மெல்லிய அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

“2008-ம் ஆண்டு நடந்த நெருக்கடி ‘கடனால்’ ஏற்பட்டது.
அந்தக் காலகட்டத்தில், அமெரிக்கா தொடங்கி அனைத்து உலக நாடுகளிலும் ரியல் எஸ்டேட் நல்ல வளர்ச்சியைக் கண்டு வந்தது.
இதன் பலனாக, வீடு அல்லது நிலம் வாங்க கடனுக்கு விண்ணப்பித்த, தகுதி இல்லாத… கிரேடிட் ரேட்டிங் குறைவாக உள்ள மக்களுக்கும் அப்போது கடன் வழங்கப்பட்டது. இதற்கு, ‘Subprime credit’ என்று பெயர்.
ரியல் எஸ்டேட் துறை சற்று சரியும்போது, இந்த மக்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால், அவர்களது வீடு அல்லது நிலம் கைப்பற்றப்பட்டது. இது பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.
இது 2008-ம் ஆண்டின் கதை.