KamalHaasan: பிரச்சார அணி பதவி கிடைச்ச நேரம் இப்படியொரு சங்கடம்! கமல் ஹாசனை திட்டி பஞ்சாயத்து ஆன டிவி நடிகர்

Spread the love

விஜய் டிவியில் `பாண்டியன் ஸ்டோர்ஸ்”, சன் டிவியில் `மருமகள்’ ஆகிய சீரியல்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். சில படங்களிலும் நடித்திருந்தாலும் டிவியில் அதிக கவனம் செலுத்தி வருபவர்.

சமீபமாக அரசியல் கருத்துகளை யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். குறிப்பாக பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், சனாதானம் குறித்து நடிகர் சூர்யாவின் அகரம் ஃபவுன்டேஷன் விழாவில் கமல் பேசிய பேச்சைக் கண்டித்து பேட்டி கொடுத்த இவர், அப்போது சர்ச்சைக்குரிய சில வார்த்தைகளைப் பேசியதாக மக்கள் நீதி மயயம் சார்பில் இவர் மீது போலீஸில் புகார் தரப்பட்டது நினைவிருக்கலாம்.

அந்த விவகாரத்தில் முன் ஜாமின் கூட விண்ணப்பித்தார்.

இந்த நிலையில் தற்போது பா.ஜ.க.வில் இவருக்கு மாநில பிரச்சார அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Kamal Haasan - கமல் ஹாசன்

Kamal Haasan – கமல் ஹாசன்

‘கமலைக் கடுமையாக விமர்சித்ததற்கு பரிசா?’ என்றோம்.

‘ஒரு நடிகனாக கமல் சார் மீது நான் ரொம்பவே மரியாதை வச்சிருக்கேன். ஆனா அவர் இந்துக்களின் நம்பிக்கையான விஷயமான சனாதானம் குறித்து விமர்சனம் செய்தா எப்படி ஏத்துக்க முடியும்? அதனால எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக பேச வேண்டி வந்தது. அது முடிஞ்சு போன விஷயம். ஆனா மீடியாவுல அதை ரொம்பவே பெரிசு பண்ணிட்டாங்க. வீட்டுல என் பொண்ணு ரொம்பவே பயப்படுகிற அளவுக்கு கொண்டு போய் விட்டுட்டாங்க.

கைது அது இதுன்னு பரவிய செய்தியில பதட்டமாகிட்ட பொண்ணு, `இனிமே யூ டியூப்கள்ல இந்த மாதிரி பேச மாட்டேன்னு சத்தியம்பண்ணுங்க’ங்கிற லெவலுக்குப் போயிடுச்சு. எப்படியோ அந்த சம்பவம் முடிஞ்சு போன விஷயம்.

அதுக்கும் பிரச்சார அணி பொறுப்பு கிடைச்சதுக்கும் தொடர்பில்லை. கட்சிக்காக நான் பேசிட்டு வர்றதை கவனிச்சு அவங்களா தந்திருக்காங்க.

அதுக்கு என்ன செய்யணுமோ அதை செஞ்சாகணும். அதனால பொண்ணுகிட்ட இப்ப பேசியிருக்கேன். இனிமே பஞ்சாயத்து ஆகிற எல்லைக்குப் போகாம கட்சி வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களைப் பேசணும்’ என்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *