தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், சுங்குவார்சத்திரத்தில் நடைபெற்ற காஞ்சீரம் மாவட்ட மக்களுடன் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்
பொதுநலத்தில் தானே நாள் முழுக்க கண்ணா
இருந்தார்.
அப்படி எம்ஜிஆர் அவர்கள் ஒரு பாட்டு
ஒன்னு பாடி இருக்கிறாங்க கேட்டிருப்பீங்க.
அப்படிப்பட்ட
நம்ம காஞ்சி தலைவர்
அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த மாவட்டம்தான்
இந்த காஞ்சி புரம் மாவட்டம்
தன்னுடைய வழிகாட்டின்றதுனாலயே
தான் ஆரம்பிச்ச கட்சியினுடைய கொடியில
அறிஞர் அண்ணா அவர்களை வச்சவர் எம்ஜிஆர்.
ஆனா
அறிஞர் அண்ணா அவர்கள் ஆரம்பிச்ச அந்த
கட்சியை
அதுக்கப்புறம் கைப்பற்றனவங்க
என்னெல்லாம் பண்றாங்கன்னு
நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியணுமான்னு
மக்களே உங்களுக்குதான் அது நல்லா தெரியுமே.
தனிப்பட்ட முறையில எங்களுக்கும்
அவங்களுக்கும் எந்த பிரச்சனையும்
கிடையாதுங்க.
எந்த வாய்க்கா வரப்பு தகரார்ல்லாம்
எதுவுமே கிடையாதுங்க
அப்படியே இருந்தாலும் அது நம்ம கண்டுக்கவே
போறது இல்லைங்க தனிப்பட்ட முறையில
அவங்களுக்கு வேணா நம்ம மேல வன்மத்தோட
இருக்கலாங்க.
ஆனா நாமெல்லாம் அப்படி கிடையவே
கிடையாதுங்க
ஆனா உங்களை என்ன நம்ம எல்லாரையும்
பொய் சொல்லி நம்ப வச்சு ஓட்டு போட வச்சு
ஏமாத்துனாங்கல்ல.
அப்படி ஏமாற் ஆட்சிக்கு வந்து நல்லது
செய்ற மாதிரி நடிக்கிறாங்கல்ல
நாடகம் ஆடுறாங்கல்ல
அவங்களை எப்படி நாம கேள்வி கேட்காம இருக்க
முடியும்.அதனால
அவங்களை நாம கேள்வி கேட்காம விட போறதே
இல்லைஇதை ஏன் நான் காஞ்சிபுரம் மாவட்டத்தில
இருந்து நான் சொல்றேன்னா
தெரிஞ்சோ தெரியாமலோ
இந்த மாவட்டத்துக்கு நமக்கும்
ஆட்டோமேட்டிக்காவே ஒரு கனெக்ஷன் ஒன்னு
ஏற்படுதுங்க.
ஏன்னா நம்மளுடைய முதல்
கள பயணத்தை தொடங்கினதே பறந்தூரில
இருந்துதான் பரந்தூருக்கு போய் அந்த மண்ணில நின்னு
அந்த மக்களுக்காக கேள்வி கேட்டதும் இதே
அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சிபுரம்
மாவட்டம்தான்
இன்னைக்கு
ஒரு பெரிய மன வேதனைக்கு அப்புறம்
இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு
வந்திருக்கிறதும்.
அதே அண்ணா அவர்கள்
பிறந்த காஞ்சிபுரம் மாவட்டம் தான்
அதனால நமக்கு எல்லாமும் எல்லாமும் கொடுத்த
நம்ம மக்களுக்காக
எல்லா நல்லதையும் செய்யணும் அதுவும்
சட்டப்பூர்வமாக செய்யணும் அங்கீகாரத்தோடு
செய்யணும் அதிகார பூர்வமா செய்யணும்
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும்
செய்யணும் ஒரே மாதிரி செய்யணும் ஒரே
எண்ணத்தோடு செய்யணும்
அந்த ஒரே லட்சியத்தோடு தான் நாம்
அரசியலுக்கே வந்திருக்கிறோம்
அதனாலதான்
மக்களிடம் செல் அப்படின்னு சொன்ன அண்ணாவை
கையில் எடுத்தோம்.
அவங்க சொன்ன மாதிரி மக்களை நோக்கி போறோம்
ஆனா மக்களிடம் செல்ன்னு சொன்ன அண்ணாவை மறந்தது
யாரு? கொள்கையா அது என்னப்பா கிலோ என்ன விலை என்னன்னு
கேட்கிற அளவுக்கு அப்படி ஒரு கட்சியை ஒன்னு நடத்திக்கிட்டு
அந்த கட்சியினுடைய தலைவர் தமிழ்நாட்டு
முதல்வர் சொல்றாரு நமக்கு கொள்கை இல்லையா
எப்படிநமக்கு கொள்கை இல்லையா
பிறப்புக்கும் எல்லா உயிருக்கும்னு ஒரு
அடிப்படை கோட்பாட்ட நம்ம கட்சியினுடைய
ஒரு முக்கிய கோட்பாட்டை அறிவிச்ச நமக்கு
கொள்கை இல்லையா எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கணும் சமூக
நீதி கிடைக்கணும் அந்த சமூக நீதி உண்மையான
சமூக நீதியா இருக்கணும் சாதிவாரி
கணக்கெடுப்பு நடத்தனும்னு ரொம்ப
ஸ்ட்ராங்கா சொன்ன நமக்கு கொள்கை இல்லையா
சிஏஏ அறிவிச்சதுக்கு அப்புறம் அப்ப நம்ம
கட்சி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே
எதிர்த்த நமக்கு கொள்கை இல்லையா
வகுப்பு சட்டத்தை எதிர்த்து
உச்சநீதிமன்றத்துக்கு முதல்ல போன நமக்கு
கொள்கை இல்லையா?
நீட்ட வந்தா ஒளிச்சிருவேன் நீட்ட வந்தா
அழிச்சிருவேன் ஆட்சிக்கு வந்த உடனே முதல்
ரத்து செய்றதே நீட்டதான் அப்படி
இப்படின்னு கதை கதையெல்லாம் விடாம
கல்வியை மாநில பட்டியலல் சேர்க்கணும்னு
சொன்னதோட மட்டுமி இல்லாம அதுக்கு ஒரு
இடைக்கால தீர்வை சொன்ன நமக்கு கொள்கை
இல்லையா?
சமத்துவம் சம வாய்ப்புன்னு ரொம்ப
ஸ்ட்ராங்கா சொன்ன நமக்கு கொள்கை இல்லையா
இப்படி கொள்கையை வெறும் பேச்சில மட்டுமே
பேசிக்கிட்டு எல்லா கொள்கையும் அண்டர்
கிரவுண்ட்ல அடகு வச்சுக்கிட்டு என்னமோ
இவங்களுக்கு மட்டும்தான் எல்லா கொள்கையும்
குத்தகைக்கு எடுத்த மாதிரி இவங்க கொள்கையே
கொள்ளை தானே.
எப்படி இவங்க கொள்கையே கொள்ளைதானே
இதனா மக்களுக்கு யாருக்கும் தெரியாது
நினைச்சிட்டு இருக்கீங்களா
எங்க கட்சி ஒன்றும் சங்கரமடம் இல்லைன்னு
சொன்னது யாரு
யார் சொன்னாங்க ஏன் சொன்னாங்க எதுக்கு
சொன்னாங்க?
இப்ப உங்க கட்சியில என்ன நடந்துகிட்டு
இருக்குது அதையும் கொஞ்சம் யோசிச்சு
பாருங்க இதையும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க
அதனால பாப்பா பவளவிழா பாப்பா
நீ பாசாங்கு காட்டாத பாப்பா
நீ நல்லவர்கள் போல் நடிப்பதை பார்த்து
நாடே பாப்பான்னு சொன்னோம்
அப்ப கூட பாத்தீங்கன்னா பாப்பான்றது ரொம்ப
ஆசையா பாசமா சாப்டாதான் சொன்னோம் அதையே நீங்க
அதிர்ச்சியா எடுத்துக்கிட்டீங்கன்னா
அதுக்கு நாங்க என்ன பண்றது அதையே நீங்க
விமர்சனம்னு சொன்னீங்கன்னா நாங்க என்ன
பண்றது இன்னும் நாங்க விமர்சனம் செய்ய
ஸ்டார்ட் பண்ணவே இல்லையே இன்னும் நாங்க
அடிக்க ஸ்டார்ட் பண்ணவே இல்லையே
அதுக்குள்ள அளனா எப்படி
அதனால உங்க அரசவை புலவர்கள் யாராவது
இருந்தாங்கன்னா கர்சீப் எடுத்து அவங்க
கண்ணீரை துடைத்து விடுங்கள்
சரி அது அவங்க பிரச்சனை அவங்க
பாத்துக்கட்டும்.
நமக்கு எப்பவுமே மக்கள் தாங்க மக்களுடைய
பிரச்சனைய பத்தி பேசுறதுதான்
இன்னைக்கு நம்ம காஞ்சிபுரம்
மாவட்டத்துக்கு வந்திருக்கிறோம்
இங்க மக்கள் பேஸ் பண்ற அந்த பிரச்சனையை
பத்தி நம்ம பேசியே ஆகணும்.
இந்த காஞ்சி மண்ணை வாழ வைக்கிற ஜீவ நதி
பாலாறு உயிர் நதி பாலாறு
இந்த மக்களோட உயிரோடவும் இரத்தத்தோடவும்
கலந்து ஓடுவது பாலாறு அந்த பாலாறை இன்னைக்கு பெரியார் பெயரையும்
அண்ணா பெயரையும் சும்மா பேருக்கு
வச்சுக்கிட்டு ஆட்சி நடத்துறவங்க என்ன
பண்றாங்க தெரியும்ல
சுரண்டிட்டாங்க கொள்ளை அடிச்சிட்டாங்க நாசம் பண்ணிட்டாங்க
மோசம் பண்ணிட்டாங்கன்னு இன்னும் என்ன
வேணாலும் சொல்லலாம் ஆக மொத்தம்
அழிச்சிட்டாங்க இத நான் வந்து எதுவும் போற போக்குல எது
அடிச்சு விடலங்க ஆதாரத்தோட தான் சொல்றேன்
அனுமதிக்கப்பட்ட அந்த லெவலை தாண்டி
22 லட்சத்தி எஆயிரம் யூனிட் மணல கொள்ளை
அடிச்சிருக்கறாங்க
சோ ஆக மொத்தம் இதுல அவங்க அடிச்ச கொள்ளை
எவ்வளவு தெரியுமா ரொம்பல்லாம் இல்ல
கம்மிதான் 4730
கோடி கம்மிதான் இல்ல
இதுக்கெல்லாம் அவங்க ஆதாரம் எல்லாம் கேட்க
முடியாது ஏன்னா இந்த ஆதாரம் எல்லாம்
ஆல்ரெடி கோர்ட்ல இருக்குது அமலாக்கு துறை
டிபார்ட்மெண்ட்ல இருக்குது அந்த
டிபார்ட்மெண்ட்ல வேலை செஞ்ச சில
நல்லவர்கள் அவங்க அடிச்ச இந்த கொள்ளை
எல்லாம் தாங்க முடியாம வெளியில வந்து
சொன்ன அந்த ஆதாரங்கள்
இதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களுக்கு
இன்னும் நல்லாவே தெரியும். அதனால இது
சம்பந்தமா ஆதாரங்களை குடுன்னல்லாம் அவங்க
கேட்க முடியாது.
மணலை கொள்ளை அடிச்சா நீர்நிலைகள் அழியும்.
ஏரி, குளம், கண்மாய் எல்லாம் அழியும்.
இதெல்லாம் அழிஞ்சா விவசாயம் அழியும்
விவசாயம் அழிஞ்ு போனா விவசாயிகள்
அழிஞ்ுருவாங்க
ஆக மொத்தம் நாம எல்லாரும் மொத்தமா அழிஞ்ு
போக வேண்டியதுதான் இப்படி மேலிருந்து கீழ
வரைக்கும் ஒரு கட்சியை சிண்டிகேட் போட்டு கொள்ளை
அடிக்கிறத கேள்விப்பட்டிருக்கீங்களா
மக்களே
இதே காஞ்சிபுரத்தோட உலக பெருமை நம்ம
பட்டும் கைத்தறி துணியும் அதை தயாரித்து
கொடுக்கிற கைத்தறி நெசபாளர்களும் தான்
காஞ்சிபுரம் பட்டுன்னு சொன்னா உலகத்துக்கே
தெரியும்.
ஆனா அதை தயாரிச்சு கொடுக்கிற நெசவாளர்கள்
நிலை என்ன தெரியுமா வறுமை துன்பம்
கந்துவட்டி கொடுமை
பட்டு கைத்தரிக்கு கூட்டுறவு சங்கங்கள்
இருக்கு பருத்தி கைத்தரிக்கும் கூட்டுறவு
சங்கங்கள் இருக்கு சுமார் 40ஆயிரம் பேர்
அதுல உறுப்பினர்களா இருக்கிறாங்க
அதுபோக சாய தொழில் தரிப்பட்டரை தொழில் இத
நம்பி 40ாய குடும்பங்கள் இருக்கு ஆனா
அவங்களோட ஒரு நாள் கூலி எவ்வளவு தெரியுமா
வெறும் 500 ரூபாதான்
அதை கொஞ்சம் அதிகப்படுத்தி கொடுங்கன்னு
போராடி போராடி பார்த்து ஒன்னும் நடக்கல
இதோட அவங்க கஷ்டம் முடிஞ்சதா
வடகிழுக்கு பருவமழை அந்த 500 ரூபாய்
கூலிக்கு வெயிட் வச்சிடுச்சு எப்படி
விவசாயிகள் டெல்டா மாவட்டங்களல் மழையால
பாதிக்கப்பட்டாங்களோ
அவங்களை கண்டுக்காம எப்படி இந்த அரசாங்கம்
கைவிட்டுடுச்சோ அதே மாதிரிதான் நம்ம கைத்தரி
நெசவாளர்களும் மழையால
பாதிக்கப்பட்டிருக்கிறாங்க
அடுத்து இந்த காஞ்சிபுரம் மாவட்டத்தோட பஸ்
ஸ்டாண்ட்
60 வருஷத்துக்கு முன்னாடி கட்டினதான்
அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தப்ப கட்டி
இருப்பாங்க போல
அது இன்னும் புதுப்பிக்க கூட முடியாம
கேட்டா என்ன சொல்லுவாங்க அந்த லேண்ட்
வந்து கேஸ்ல இருக்குது
இல்ல நான் கேட்கிறேன்
ஒரு கவர்மெண்ட்னால
வேற ஒரு நல்ல இடத்தை தேர்வு செஞ்சு ஒரு
பஸ் ஸ்டாண்ட் கட்டி தர முடியாதா
பிரச்சனை என்ன தெரியுமாங்க அவங்களுக்கு
மக்களை பத்தி யோசிக்கிறதுக்கே நேரம் இல்ல
அதுதான் பிரச்சனை
பரந்தூர்
ஏர்போர்ட் கட்டற பிரச்சனையும் இருக்குது
அந்த பிரச்சனையில கண்டிப்பா நாங்க
விவசாயிகள் பக்கம் தான் நிப்போம். அதுல
எந்த மாற்று கருத்துமே கிடையாது.
இந்த கவர்மெண்ட் பரந்தூர் விவகாரத்தில
எங்களுக்கோ இல்ல விவசாயிகளுக்கோ
எந்தவிதமான காரணங்கள் சொல்லி எஸ்கேப் ஆகவே
முடியாது.
இப்படி மக்களுக்காக மக்களோட பிரச்சனைகளை எடுத்து பேசுறதுனால
இப்ப ஆட்சியில் இருக்கிறவங்களுக்கு நம்ம
மேல ஒரு ஆத்திரம் வரத்தானே செய்யும்.
அதனாலதான் நீங்க பார்த்தீங்கன்னா
சட்டசபையில் ஆரம்பிச்சு ஒரு சாதாரண
நிகழ்ச்சி வரைக்கும் எல்லா மேடையிலயும்
மேடைக்கு மேடை டிவிகே தான்
டிவிகே அவதூறு அவதூறு டிவிகே டிவிகே
அவதூறு அவதூரு டிவிகே
இதுக்கெல்லாம் கண்டிப்பா நாங்க பதில்
சொல்லுவோம் சொல்லாமல்லாம் இருக்க மாட்டோம்
இப்ப கூட கரூர பத்தி பேசுவேன்னு
எதிர்பார்த்திருப்பாங்க
அத நான் கொஞ்சம் அப்புறமா பேசுறேன் பட்
இப்போ நம்மளுடைய விஷன் என்னன்னு
சொல்லணும்னு நான் கொஞ்சம் ஆசைப்படுறேன்
நம்ம ஆட்சிக்கு வந்தா
அது என்ன வந்தா
வருவோம்.
மக்கள் கண்டிப்பா நம்மள வரவைப்பாங்க
மக்களுக்கான ஆட்சியை மக்களை விரும்பி
வரவைக்கத்தானே செய்வாங்க
அப்படி மக்களால் அமைக்கப்பட போற நம்
ஆட்சியில நம்ம என்ன செய்ய போறோம்ன்றத
அதுக்கான அந்த தேர்தல் அறிக்கையில அது ஒரு
அதுக்கான விளக்கத்தை டெபனட்டா கொடுப்போம்
பட் அதுக்கு முன்னாடி ஒரு சின்னதா லைட்டா
நான் கொஞ்சம் அதை சொல்லணும்னு
ஆசைப்படுறேன்.
எல்லாருக்கும் நிரந்தரமான வீடு இருக்கணும்
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார்
சைக்கிள் வாகனம் உறுதியா இருக்கணும்
காரும் தான் லட்சியம்
அதுக்கான வசதி வாய்ப்பை உருவாக்குற
அளவுக்கு பொருளாதார வளர்ச்சிக்கு வழியை
உண்டாக்கணும்
ஒவ்வொரு வீட்டில இருக்கிற ஒவ்வொருத்தரும்
மினிமம் டிகிரி படிச்சிருக்கணும்
ஒவ்வொரு வீட்டிலயும் குறைந்தபட்சம்
ஒருத்தருக்கு நிரந்தர வருமானம்
கிடைக்கணும்.அதுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கணும்
அதுக்கு தகுந்த மாதிரி கல்வியில
பாடத்ததிட்டத்தில் சீர்திருத்தம்
செய்யணும்.
கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ஸுக்கு மக்கள்
எல்லாரும் பயமில்லாமல் நம்பி போற மாதிரி
மாத்தணும்.
பருவமழை காலத்தில் ஏற்படுற வெள்ளத்தால
ஊரும் சரி மக்களும் சரி விவசாயமும் சரி
பாதிக்கப்படாமல் இருக்கணும். அதுக்கு 4000
கோடி திட்டம்னு ஒரு உருட்டு
உருட்டுனாங்களே
அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லாம
உண்மையான ஒரு பாதுகாப்பு திட்டத்தை
உருவாக்கணும்.
மீனவர்களோட
தொழிலாளர்களோட நெசவாளர்களோட அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களோட கருத்து
கேட்டு அவங்களுக்கான பாதுகாப்பு மற்றும்
வளர்ச்சி திட்டங்களை உருவாக்கணும்
உருவாக்குறது மட்டுமில்ல அதை
செயல்படுத்தணும் முக்கியமா
இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட்ஸ்ல
கான்சென்ட்ரேட் பண்ணனும் எல்லாத்தையும்
விட ரொம்ப ரொம்ப முக்கியம் சட்டம் முழுங்க
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா வச்சிருக்கணும்
நம்முடைய அம்மா அக்கா தங்கச்சிகள்
அவங்களுடைய பிள்ளைகள்
குழந்தைகள் எல்லாருக்கும் பாதுகாப்பை
அதுவும் உண்மையான ஸ்ட்ராங்கான பவர்புல்லான
பாதுகாப்பை உண்டாக்கணும்
அண்ணா யூனிவர்சிட்டில நடந்த அந்த
பெண்ணுக்கு நடந்த அந்த பிரச்சனை மாதிரியோ
இல்ல கோவையில நடந்த அந்த கல்லூரி
பெண்ணுக்கு நடந்த பிரச்சனை மாதிரியோ
அதெல்லாம் நடக்க விடவே கூடாது நம்ம வீட்டு
பெண்கள் ஸ்ட்ராங்கா பயமே இல்லாம தைரியமா
இருக்கணும்.
இதை எப்படி செயல்படுத்த போறோம்ன்றது
முன்னாடி சொன்ன மாதிரி நம்மளுடைய தேர்தல்
அறிக்கையில அதுக்கான விளக்கத்தை ரொம்ப
டீடைல்டா கொடுப்போம். நான் சும்மா
மத்தவங்க மாதிரி அவங்கள மாதிரி
எல்லாத்தையும் அடிச்சு விட்டுட்டு
ஏமாத்துற வேலை எல்லாம் இங்க கிடையாது
நம்மகிட்ட
நான் மறுபடியும் சொல்றேன்
நம்ம அரசியலுக்கு வந்தது உங்களுக்கு
நல்லது நல்லது நல்லது மட்டுமே செய்றதுதான்
எங்களுக்கு வேற எந்த அஜெண்டாவும் கிடையாது
அதனாலதான் பாத்தீங்கன்னா கொள்கை எதிரி
யாரு அரசியல் எதிரி யாரு திட்டவட்டமா
சொல்லிட்டு அத வெளிய சொல்லிட்டு
களத்துக்கு வந்திருக்கிறோம். அதுல
எந்தவிதமான குழப்பமோ எந்தவிதமான ஊசலாட்டமோ
எதுவுமே இருக்க போறதில்ல இந்த விஜய்
சும்மா எதையும் சொல்ல மாட்டான்
ஒன்னு சொன்னா அதை செய்யாம விடமாட்டான்
அது மக்களுக்கு நல்லாவே தெரியும்
அப்புறம் ஒரு அதிசயம்
அதிசயம் சொல்ல முடியாது இது ஒரு கண்
கண்டுபிடிக்க முடியாத ஒரு உண்மைன்னு
சொல்லலாம் அது என்னப்பா அது
தற்குறியா?
நம்ம டிவிகேக்கு சப்போர்ட் பண்ற கோடிக்கண
லட்சக்கணக்கான மக்கள்
நம்மளுடைய நண்பா நன்பிகள்
நம்மளுடைய ஜென்சி கிட்ஸ்
எல்லாரையும் தற்குறிகள்னு சொல்லி வாங்கி
கட்டிக்கிட்டு இப்போ அவங்கல்லாம் தற்குறி எல்லாம்
கிடையாது அப்படி எல்லாம் அவங்களை
கூப்பிடாதீங்க …
அவங்க சங்கிகள் எல்லாம் கிடையாது அப்படி
எல்லாம் அவங்களை கூப்பிடாதீங்கன்னு சொல்லி
ஒரு குரல்
யாருடா அந்த குரல் அப்படின்னு பார்த்தா
இப்ப ரீசன்டா அறிவு திருவிழான்னு ஒன்னு நடத்துனாங்கள
சாரி அவதூறு திருவிழா
அதுல அவங்க தலைமையையே
குழப்புற மாதிரி அறிவு கண்ணை திறந்து
வைக்கிற மாதிரி ஒருத்தர் பேசி
இருக்கிறார். அவர் யாருன்னா அது அவங்களோட
எம்எல்ஏவே அந்த எம்எல்ஏ யாருன்னா நம்மளுடைய கொள்கை
தலைவர்கள்ல் ஒருத்தரான மக்கள் சேவகர்
அஞ்சலை அம்மாளோட சொந்தக்காரர்
என்னடா இது இப்படி ஆயிப்போச்சு டிவிகேக்கு
சப்போர்ட் சப்போர்ட் பண்ற மாதிரி நம்ம
கட்சியில இருந்தே ஒரு குரல் வருதேன்னு
சொல்லி தலைமையில ஃபுல்லா கன்பயூஷன் அந்த
கன்பயூஷன் இதோட நிக்காது அந்த ஆதரவு குரல்
அந்த ஆதரவு குரல் ஒரு வீடு விடாம ஒரு இடம்
விடாம எல்லா இடத்திலயும் எல்லா
வீட்டிலையும் இன்னும் பலமா எதிரொளிக்குதா
இல்லையான்னு பாருங்க
சும்மா பிளாஸ்ட் பிளாஸ்ட்தான்
இது இன்னைக்கு நேத்துல்லாம் நடக்கலங்க
1972லயே நடந்து முடிஞ்சிருச்சு எப்போ
எம்ஜிஆர் அவர்கள் கட்சி ஆரம்பிச்சாங்களோ
அப்பவே அது வந்து ஒரு கூத்தாடி கட்சி
எப்போ எம்ஜிஆர் அவர்களுக்கு பின்னாடி
அத்தனை மக்கள் திரண்டு நின்னாங்களோ அப்பவே
அது வந்து ஒரு கூத்தாடி கும்பல்
நடிகர் கட்சி நடிகர் கட்சி நடிகர்
கட்சின்னு சொன்ன ஒருத்தரு அதுக்கப்புறம்
எம்ஜிஆர் கூடயே போய் சேர்ந்துட்டாரு.
இன்னொருத்தர் இவரெல்லாம் ஒரு ரவுண்டு
தாங்க வருவாரு ரெண்டாவது ரவுண்ட் எல்லாம்
காணாம போயிடுவார்ன்னு சொல்ல இன்னொருத்தர்
அதுக்கப்புறம் போய் எம்ஜிஆர் கிட்டயே போய்
சேர்ந்துட்டார்.
சோ இந்த மாதிரி இவங்க ரெண்டு பேர் மட்டும்
இல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும்
எம்ஜிஆர் அவர்கள் கூடதானே போய்
சேர்ந்தாங்க. அதனால
இது வரலாறு….
இந்த வரலாறு நம்மள விட அவங்களுக்கு
இன்னும் நல்லாவே தெரியும் அதனாலதான்
பார்த்தீங்கன்னா 53 வருஷமா அதே கதரல்கள்
கூத்தாடி கூத்தாடி கூட்டம்
நடிகர் நடிகர் கட்சி நடிகர் கூட்டம்
இப்படி மர்மயோகின்ற ஒரு படத்தில
அவருடைய கேரக்டர் பெயர் வந்து கரிகாலன்
அதுல ஒரு சூப்பர் டயலாக் ஒன்னு சொல்லி
இருப்பாரு குறி வைத்தால் தவற மாட்டேன்
தவறுமானால் குறியே வைக்க மாட்டேன்
இதெல்லாம்
யாருக்கு சொல்றோம் எதுக்கு சொல்றோம்னு
புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா நல்லா
இருக்கும்
ஏன்டா இந்த விஜயை தொட்டோம்
ஏன்டா விஜய் கூட இருக்கிற அந்த மக்களை
தொட்டும்
நினைச்சு நினைச்சு நினைச்சு பீல் பண்ண
போறீங்க
அப்புறம்
நமக்கு இந்த அரசியல் புரிதல்ல்லாம் இல்ல
அது இல்ல இது இல்ல அப்பறம் நான்
கேட்கிறேன்
மக்கள் எல்லாரும் உங்களுக்கு தற்குறிகளா
அதே மக்களோட ஓட்டு வாங்க போற நாம
தற்குறிகள்னா அப்ப இவ்வளவு நாள் அதே
மக்கள் கிட்ட இருந்துதானே நீங்க ஓட்டு
வாங்கிட்டு இருந்தீங்க
அப்ப நீங்க
அந்த மக்களுக்கு நீங்க காட்டுற
மரியாதையும் நன்றியும் இதுதானா
ஒன்னு மட்டும் சொல்றேன் எழுதி வச்சுக்கங்க
இந்த தற்குறி தற்குரின்னு சொல்றீங்கள இந்த
தற்குறிகள் எல்லாம் ஒன்னா சேர்ந்துதான்
வாழ்நாள் பூரா விடையை கண்டுபிடிக்காத
முடியாத அளவுக்கு உங்க அரசியலை ஒரு
கேள்விக்குறியாக்க போறாங்க
இவங்கல்லாம் யாரும் இங்க தற்குறிகள்
எல்லாம் கிடையாது இவங்க எல்லாரும்
தமிழ்நாட்டு அரசியலோட ஆச்சரிய குறி
இவங்க எல்லாரும் தமிழ்நாட்டு அரசியலோட
அந்த மாற்றத்திற்கான அறிகுறி
சும்மா லாஜிக்கே இல்லாம தற்குரி தற்குரி
நண்பா நன்றி
எல்லா மேடைலயும் ரிப்பீட்டடா ஒரு விஷயம்
நான் சொல்லுவேன்ல இப்ப நீங்க சொல்லுங்க
ஒன்னு
இன்னொன்னு
ரிப்பீட்
ஒன்னு
இன்னொன்னு
இந்த போட்டி எப்படி இருக்க போதுன்னா
மக்களோட மக்களா நிக்கிற நமக்காக மக்களே
டிசைட் பண்ணி போறாங்க மை டியர் சார் மை
டியர் அங்கிள்
ஆல்ரெடி டிசைட் பண்ணியாச்சு
கான்பிடெண்டா இருங்க மக்களே நல்லதே
நடக்கும் வெற்றி நிச்சயம் மீண்டும்
சந்திக்கும் வரை நன்றி வணக்கம்þ
இவ்வாறு அவர் பேசினார்.