துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழி, தி.மு.க வின் தென்மண்டல பொறுப்பாளராகவும் இருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் கனிமொழி கையிலெத்தெடுத்த ஒரு மூவ் காரணமாக தி.மு.க தலைமையும் கொஞ்சம் ஷாக்கில் உள்ளது.
தி.மு.க வின் துணை பொதுச்செயலாளராகவும், தென் மண்டலத்திற்கான பொறுப்பாளராகவும் இருக்கிறார் கனிமொழி. டெல்லியின் தி.மு.க-விற்கான மூவ் களை இவரை வைத்தே ஸ்டாலின் செய்துவருகிறார்.
சமீபத்தில் காங்கிரஸ் – தி.மு.க இடையே கூட்டணி சிக்கல் வந்தபோது கனிமொழி தான் ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானபோதும் கனிமொழி உடன் இருந்தார்.
டெல்லியில் தி.மு.க தொடர்பான பணிகளாக இருந்தாலும், மத்திய அரசு தொடர்பான கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்திலும் தி.மு.க சார்பாகவும், இதற்கு முன்பாக தமிழக அரசின் சார்பாகவும் பங்கெடுத்த கனிமொழிக்கு தற்போது டெல்லி அரசியல் மீது விருப்பம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு பின்னால் இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று டெல்லியில் கனிமொழியின் செல்வாக்கை குறைத்துவிட்டு, அந்த இடத்தில் முதல்வரின் மருமகன் சபரீசனை நியமிக்க இருப்பதாக கிளம்பிய பேச்சு.
மற்றொன்று தமிழக அரசியல் களத்தில் கனிமொழிக்கு கிடைத்து வரும் அபரீதமான வரவேற்பும், கனிமொழியை உற்சாகப்படுத்தியுள்ளது. மொழி புரியாத டெல்லிக்கு சென்று அரசியல் செய்வதைவிட, தமிழகத்திலே நமது அரசியலை வேகமாக முன்னெடுக்கலாம் என்று சில மாதங்களாகவே கணக்கு போட்டுவந்தார்.