கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்துவருகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே சித்தராமையாவுக்கும் காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கும் இடயே மோதல் போக்கு நிலவி வந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய காங்கிரஸ் தலைமை இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, சமானாதப்படுத்தியே தேர்தலை நடத்தி முடித்திருந்தது.
அப்போதே இருவரும் 5 ஆண்டுகள் ஆட்சியை சரிசமமாக பிரித்து ஆட்சி செய்துகொள்ளலாம் என “ரகசிய ஒப்பந்தம்’ மூலம் முடிவெடுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், முதல்வராக சித்தராமையா தலைமையிலான அரசு 2.5 ஆண்டு பதவிக் காலத்தை, நவம்பர் 20 அன்று நிறைவு செய்தது. அப்போது முதலே இரு தலைவர்களுக்கு மத்தியில் மீண்டும் ‘ரகசிய ஒப்பந்தம்’ புகையத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “கர்நாடக மக்கள் அளித்த ஆணையை ஏற்று எனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன். ஐந்து உத்தரவாதத் திட்டங்கள் உட்பட கட்சியின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.