KD: The Devil: சஞ்சய் தத்தின் `சர்கே சுனார்’ பாடலுக்கு வலுக்கும் கண்டனங்கள்! ஆபாச வரிகளால் வெடித்த சர்ச்சை! Growing Condemnation for Sanjay Dutt’s ‘Sarke Chunar’ Song! Controversy Erupts Over Obscene Lyrics!

Spread the love

சமீபகாலமாக இந்தியத் திரையுலகில் திரைப்படங்களின் ப்ரோமோஷனுக்காகவும், வணிக வெற்றிக்காகவும் ஐட்டம் சாங்ஸ் என்று சொல்லப்படும் ஸ்பெஷல் நடனப் பாடல்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், ரசிகர்களைக் கவர வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படும் இரட்டை அர்த்த வரிகளும், எல்லை மீறும் நடன அசைவுகளும் சில நேரங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

கேடி: தி டெவில் படம்

கேடி: தி டெவில் படம்

அப்படியொரு சர்ச்சையில்தான் தற்போது சிக்கியுள்ளது கன்னட பான்-இந்தியா திரைப்படமான “கேடி: தி டெவில்’ (KD: The Devil) படத்தில் இடம்பெற்றுள்ள “சர்கே சுனார் தேரி சர்கே” (Sarke Chunar Teri Sarke) பாடல். சஞ்சய் தத்தாலும், நோரா ஃபதேஹியின் நடனத்தாலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்பாடல், இன்று அதன் ஆபாச வரிகளுக்காகத் தடையை எதிர்கொண்டு இணையம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் மிகவும் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தங்கள் கொண்டதாகவும், பாலியல் ரீதியாகத் தூண்டும் வகையிலும் இருப்பதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், பாடலின் நடன அசைவுகளும், காட்சியமைப்பும் நாகரிகத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *