KH x RK:“இந்த இரண்டு ஜாம்பவான்களின் சங்கமம்” – ரெட் ஜெயண்ட் நிறுவனம்|KH x RK: “The confluence of these two giants” – Red Giant Company

Spread the love

இந்த நிலையில், படத்தைத் தயாரிக்கும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தன் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் படம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “வரலாறு எப்போதும் திரும்புவதில்லை… ஆனால், அப்படி ஒருமுறை திரும்பும்போது அது தலைமுறைகள் கொண்டாடும் ஒரு திருவிழாவாக மாறுகிறது!

இரண்டு பிரம்மாண்ட ஆளுமைகள் (KH x RK) மீண்டும் இணைந்திருக்கும் இந்த தருணம், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திற்கு மிகுந்த பெருமையும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு தருணமுமாகும். நாம் அனைவரும் திரையில் பார்த்து வியந்து வளர்ந்த இந்த இரண்டு ஜாம்பவான்களின் சங்கமம், ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும்.

ரஜினி - கமல்

ரஜினி – கமல்

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைச் சாத்தியமாக்கிய இயக்குநர் நெல்சனின் அசாத்தியமான உழைப்பிற்கும், திறமைக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். இந்த பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு நம் ‘ராக்ஸ்டார்’ அனிருத் தனது இசையால் மேலும் பலம்சேர்ப்பார் என்பதில் ஐயமில்லை. அந்த நாள் இன்றுதான்! நேரம்: நண்பகல் 12:07 மணி.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *