நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 2023 ம் ஆண்டு பிப்ரவதி மாதம் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதிப்புகள் குறித்து அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி
இந்த நிலையில் நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து இன்று(14ந்தேதி) திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டதாக அறிவித்து உள்ளது.
நடிகை குஷ்புவின் இந்த திடீர் ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது இந்த முடிவுக்கான காரணம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
நாட்டை துண்டாட விரும்புகிறது: திராவிட சித்தாந்தம் மீது கவர்னர் சாடல்
பா.ஜ.க.வில் இணைந்தார்
நடிகை குஷ்பு முதலில் தி.மு.க.வில். இருந்தார். பின்னர் அவர் காங்கிரஸ்கட்சியில் இணைந்தார். இதைத்தொடர்ந்து. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, கடந்த 2020-ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்தார். 2021-ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
அதன்பின், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு வழங்கப்பட்டது.அவருக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியும் கிடைத்து இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த பதவியை குஷ்பு ராஜினாமா செய்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவின் சுதந்திரதின முழு உரை