Kolathur பிரசார சர்ச்சை: Vijayக்கு மைக் தடை?|CTR Nirmal Kumar Alleges Bias Against Vijay

Spread the love

கொளத்தூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அந்தக் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் CTR. நிர்மல் குமார் பதிவிட்டுள்ளார்.

“தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு மைக் மற்றும் பாக்ஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்தத் தடை விதிப்பதா?

முதலமைச்சரின் தொகுதி என்றால் மற்றக் கட்சியினர் பிரசாரம் செய்யக் கூடாதா?

திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம், ஆனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மைக்குடன் பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பதா?

அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறதா?

பிரசாரத்தில் விஜய்

பிரசாரத்தில் விஜய்

கழகத் தலைவரின் பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும், இன்று மதியம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் அங்கு சென்றடையும் வரைக்கும், மாலை முதலமைச்சர் வருகிறார் என்று காரணம் கூறி பிரசார இடத்தில் இரும்பாலான தடுப்புகள் கொண்டு (Barricades) பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்கவில்லை.

தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால், முதலமைச்சர் வருகிறார் என்று கூறி பிரசாரத்திற்கு தடை விதிப்பது கண்டனத்திற்குரியது.

திமுகவின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *