இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஜெயகுமாரி கோத்தகிரி காவல்நிலையத்தில் நேற்று மாலையே புகார் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உமாநாத் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள உமாநாத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர் .

பின்னணி குறித்து நம்மிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண் ஜெயகுமாரி, “பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த நான் தலைவராக பதவியேற்றதே இவருக்கு பிடிக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அவர் தொடர்ந்து என்னை சாதியின் பெயரைச் சொல்லி இழிவு படுத்துவது, பெண் என்றும் பார்க்காமல் மிகவும் ஆபாசமான வார்த்தைகளில் பேசுவது என மிகவும் மோசமாக நடந்து வந்தார். ஒரே கட்சியைச் சேர்ந்தவர் என்ற மரியாதைக்காக இத்தனை நாளாக பொறுத்து வந்தேன். மிகவும் எல்லை மீறிய பேச்சால் தற்போது புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்யச் சொன்னேன் ” என்றார்.