பிரயாக்ராஜ்,ஜன.29-
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா ஜன.13ம் தேதி தொடங்கி 40 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் கோடிக்கணக்கான பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
மவுனி அமாவாசையான இன்று(29ந்தேதி) கும்பமேளாவில் கலந்து கொண்டு நீராட நேற்று பலலட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் கும்பமேளா நடைபெறும் இடத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இன்று அதிகாலை 1 மணிக்கு மேல் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால்ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினர். இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் மயங்கி விழுந்தனர். மேலும் ஒருவர் மீது ஒருவர் மிதித்து ஓடியதால் பலர் படுகாயம் அடைந்தனர். மேலும் 30 பக்தர்கள் பலியானார்கள்.
கூட்ட நெரிசலைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அங்கு ராணுவத்தினரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு ஆஸ்பத்திரயில் சகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று மாலை வரை கூட்ட நெரிசலில் சிக்கி எத்தனைபேர் இறந்தனர் என்ற விபரத்தை உத்திரபிரதேச அரசு தெரிவிக்காமல் இருந்தது. பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வெளியிட்ட இரங்கலில் பலியானவர்கள் பற்றிய விபரம் குறிப்பிடப்படவில்லை. இதனால் ஏராளமானோர் பலியாகி விட்டதாக நாடு முழுவது பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கும்பமோளவில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்து உள்ளதாக உ.பி., போலீசார் தற்போது அறிவித்து உள்ளனர். இவர்களில் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற 5 பேரையும் அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது என்று மகா கும்ப மேளா டி.ஐ.ஜி., வைபவ் கிருஷ்ணா அறிவித்து உள்ளார்.