LIK: "என் படம் 100 கோடியைத் தொடலைன்னா…" – பிரதீப் ரங்கநாதன்

Spread the love

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘LIK’ திரைப்படம், வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.

‘டிராகன்’, ‘லவ் டுடே’, ‘டியூட்’ படங்களைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

'LIK'
‘LIK’

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (ஏப்ரல்.7) சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பிரதீப் ரங்கநாதன், “நான் என்னோட ஃபேன்ஸ் என்று சொல்வதற்குக் கொஞ்சம் கூச்சப்படுவேன். ஏன்னா ‘என்னடா அதுக்குள்ள உனக்கு ஃபேன்ஸா’ என்று சொல்வாங்க.

ஆனா நான் போகிற இடமெல்லாம் அவர்கள் காட்டுகின்ற அன்பையும், ஆதரவையும் பார்த்துட்டு அவங்க பேரைச் சொல்ல நான் ஏன் கூச்சப்படணும் என்று தோணுச்சு. என்னோட ஃபேன்ஸ், உங்க எல்லோருக்கும் ரொம்ப நன்றி, நீங்க இல்லாம நான் இங்க இல்ல” என்று பேசியிருக்கிறார்.

தவிர ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரி ரிலீஸ் ஈவென்ட்டில் பேசிய பிரதீப் ரங்கநாதன், ” ‘LIK’ என்னோட 2-வது படமாக ரிலீஸ் ஆக வேண்டிய படம். ஆனா CG வேலைகள் மற்றும் சில காரணங்களால் தாமதமாகிருச்சு.

இந்தப் படம் 100 கோடி வசூல் செய்தால் எனக்கு சந்தோஷம்தான், ஆனா அதுவே இப்போது எனக்கு ஒரு அழுத்தமாக மாறிருச்சு.

பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

இப்போதெல்லாம் என் படத்தோட குறைந்தபட்ச வசூலே 100 கோடிதான் என நிர்ணயிச்சுட்டாங்க. ஒருவேளை அது 100 கோடியைத் தொடலன்னா படம் தோல்வியாகிவிட்டதுன்னு சொல்லிடுவாங்க.

அதனால, வசூலை விட மக்களுக்கு இந்தப் படம் பிடிச்சிருந்தாலே எனக்கு பெரிய மகிழ்ச்சி” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *