சென்னையில் ஜியோ ஹாட்ஸ்டார் நடத்திய “South Unbound’ நிகழ்ச்சி நேற்று (டிச.10) நடைபெற்றது.
பல இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதற்காக நான்கு மாநிலங்களில் 12,000 கோடி ரூபாயை முதலீடு செய்யப்போவதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
அதில் 4000 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி பிக் பாஸ் தொகுப்பாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர்.
ஜியோ ஹாட்ஸ்டாரின் அடுத்த ஆண்டின் லைன் அப் அப்டேட்களையும் இந்த நிகழ்ச்சியில் அறிவித்தார்கள்.
அந்தவகையில் இந்த நிகழ்ச்சி மேடையில் ஜியோ ஹாட்ஸ்டாரில், விகடன் தயாரிப்பில் வெளியாக இருக்கும் ‘லிங்கம்’ வெப் சீரிஸின் புரொமோ வெளியிடப்பட்டது.