அங்கு பேசிய ஆமிர் கான், “ஒரு வருடத்திற்கு ஒரு திரைப்படம் செய்ய வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.
சொல்லப்போனால் என்னுடைய எமோஷனும் அதுதான். ஆம், நான் வருடத்திற்கு ஒரு படம் கொடுப்பேன் எனச் சொல்லியிருந்தேன்.
(சிரித்துக் கொண்டே…) அதைச் செய்வதற்கு நிச்சயமாக முயற்சி செய்வேன். இந்த விஷயம் எனக்குப் பிடிக்கும் கதையைச் சார்ந்தது.
எனக்கொரு கதை பிடிக்கவில்லை என்றால், அதில் நான் நடிக்க மாட்டேன். லோகேஷ் கனகராஜும் நானும் சந்திக்க வேண்டும். கடந்த மாதம் நாங்கள் பேசினோம்.
அவர் மும்பைக்கு வரும்போது கதைக்கான நரேஷன் வைத்துக்கொள்ளலாம் எனச் சொல்லியிருக்கிறார். அத்திரைப்படமும் நடப்பதற்கான திட்டத்தில்தான் இருக்கிறது.” என்றார்.