ஒரு சீன இன்ஃப்ளூயன்சர் தனது ரசிகர்களுடன் நேரலையில் (Livestream) பேசிக்கொண்டிருக்கும் போது, இத்தனை நாளாக அவர் பயன்படுத்திய `பியூட்டி ஃபில்டர்” திடீரென வேலை செய்யாமல் போனது. இதனால் சில வினாடிகளுக்கு அவரது உண்மையான முகம் பார்வையாளர்களுக்குத் தெரிந்தது. அடுத்த சில வினாடிகளில் மீண்டும் ஃபில்டர் வேலை செய்யத் தொடங்கி, அவரது முகத்தை மிகவும் வெள்ளையாகவும், பொம்மை போலவும் மாற்றியது.
இந்த 4 வினாடி வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. ஃபில்டர் இல்லாமல் அவரது உண்மையான முகத்தைப் பார்த்ததால், சில நிமிடங்களிலேயே சுமார் 1,40,000 ஃபாலோயர்கள் அவரைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டார்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
வீடியோ வைரலானாலும், உண்மையிலேயே 1,40,000 ஃபாலோயர்களை இழந்தாரா என்பதற்கோ அல்லது இந்தச் சம்பவம் முழுமையாக உண்மையானது தானா என்பதற்கோ எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை. மேலும், வீடியோவில் இருக்கும் அந்தப் பெண் யார் என்பதும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.