விலை உயர்வைக் கட்டுப்படுத்தாமல், அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை (ESMA) மத்திய அரசு அமல்படுத்தியிருக்கிறது. நம்மிடம் இருந்த கையிருப்பு என்னவானது? முறையான திட்டமிடல் இல்லாமல் திடீரென “எஸ்மா’ சட்டத்தை அமல்படுத்துவது ஏன்? 2014-ல் ரூ400 ஆக இருந்த சிலிண்டர் விலை இன்று ரூ1,000-ஐத் தொட்டுள்ளது. இது போர் காரணமாக மட்டும் நடந்ததல்ல, மத்திய அரசின் நிர்வாகத் தோல்வி.
உண்மையிலேயே தட்டுப்பாடு உள்ளதா அல்லது தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், எரிபொருளை மத்திய அரசு பதுக்கி வைக்கிறதா? மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விவகாரத்தில், மாநில அரசு மானியம் கொடுத்தாலும் விநியோகம் சீராக இல்லாவிட்டால் பலன் இருக்காது.

இந்த விலை உயர்வால் உணவகத் தொழில், உணவு விநியோகம் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது 12 மில்லியன் நீக்குவதை விட, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் கவனம் செலுத்துங்கள். எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மார்ச் 16 அன்று கொல்கத்தாவில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி நடைபெறும்” எனக் தெரிவித்திருக்கிறார்.