இந்தியா தனது எல்பிஜியில் 50 சதவீதத்தை சவுதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. கத்தாரில் இருந்து 15 சதவீதமும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 10 சதவீதமும், அமெரிக்காவிலிருந்து 10 சதவீதமும், குவைத்திலிருந்து 5 சதவீதமும், ஈரானில் இருந்து 5 சதவீதமும் இறக்குமதி செய்கிறது. இப்போது வளைகுடா நாடுகளில் இருந்து வரத்து குறைந்தால், இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படலாம். இதனால் விலை எவ்வளவு உயரும் என்று கூற முடியாது. எனவே, தாமதிக்காமல் சமையல் எரிவாயுவை இப்போதே முன்பதிவு செய்வது நல்லது. ஏனென்றால் இன்னும் சில நாட்களில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
LPG Cylinder: மக்களே உஷார்… சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு? – என்ன செய்ய வேண்டும் தெரியுமா? | வணிகம்
