Madhav Gadgil: மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும் வரை இவரின் பெயர் ஒலிக்கும்! சூழலியல் பேரறிஞர் மாதவ் காட்கில் இயற்கை எய்தினார்.-environmental scientist Madhav Gadgil .

Spread the love

இந்திய துணைக்கண்டத்தின் பெருங்கொடை, பேரதியசம், இயற்கையின் புதையல் என உயிரியலாளர்களாலும் இயற்கையியலாளர்களாலும் போற்றப்படுகிறது மேற்கு தொடர்ச்சி மலை. மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகளால் சிதைக்கப்பட்டு வரும் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க பல ஆய்வாளர்களை காலம் கொடையாக வழங்கி வருகிறது. அப்படி வழங்கப்பட்ட முன்னோடி ஆய்வாளர்களில் ஒருவர் தான் இந்திய சூழலியலின் தலைச் சிறந்த பேரறிஞர் பேராசிரியர் மாதவ் காட்கில்.( Madhav Gadgil)

1942- ம் ஆண்டு புனேவில் பிறந்த இவர், புனே பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டம், மும்பை பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் ஆய்வாளர் பட்டம் பெற்றார்.

1973 முதல் 2004 ஆம் ஆண்டு வரை பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றியதுடன் சூழலியலை அறிவியல்பூர்வமாக அணுகி அதற்கான ஆய்வு மையத்தையும் நிறுவினார். மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பாக அரசு அமைத்த நிபுணர்கள் குழுவின் தலைவராக பொறுப்பு வகித்து அசாத்தியமான அறிக்கையை உருவாக்கினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *