MAHER: 19-வது பட்டமளிப்பு விழாவை வெற்றிகரமாக நடத்திய மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்!

Spread the love

தமிழ்நாட்டில் கடந்த 22 ஆண்டுகளாக கல்வி பணியாற்றி வரும் நிகர்நிலைப்பல்கலைக்கழகமான மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (MAHER), அதன் ஒரு அங்கமான காஞ்சிபுரம், ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் டிசம்பர் 22 மற்றும் 23, 2025 அன்று அதன் 19-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை வெற்றிகரமாக நடத்தியது.

பட்டமளிப்பு விழாவிற்கு மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவரது தொலை நோக்குப்பார்வை நிறுவனத்தின் நிலையான வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைமை புரவலர் திருமதி. கோமதி, ஆர், இணை வேந்தர் திரு, ஆகாஷ் பிரபாகர், துணை வேந்தர். பேராசிரியர். டாக்டர் C.ஸ்ரீதர், சார்பு துணை வேந்தர் பேராசிரியை டாக்டர் (கிருத்திகா மற்றும் பதிவாளர் பேராசிரியை டாக்டர். சுரேகா வரலட்சுமி ஆகிய உயர் அதிகாரிகளின் முன்னிலையில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

MAHER பட்டமளிப்பு விழா

MAHER பட்டமளிப்பு விழா

வரவேற்பு உரையில், திருமதி ஜெயந்தி ராதாகிருஷ்ணன், 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து MAHER இன் பயணத்தைப்பற்றிப் பேசினார். மேலும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் கடந்த ஆண்டில் MAHER அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துரைத்தார்.

நிறுவனர் வேந்தர் திரு.ஏ.என். ராதாகிருஷ்ணன் அவர்களின் தொலைநோக்குப்பார்வையை அவர் அன்புடன் நினைவு கூர்ந்தார் சிறப்புரை ஆற்றிய இந்நிறுவனத்தின் இணை வேந்தர் திரு. ஆகாஷ் பிரபாகர் அவர்கள் சமூகத்தை மாற்றும் வல்லமை கொண்ட கல்வி எனும் சிறப்பு மிக்க ஆயுதத்தை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 2024-25 கல்வியாண்டிற்கான ஆண்டு அறிக்கையை துணைவேந்தர் வழங்கினார் இதில் அங்கீகாரம் மற்றும் தரவரிசையில் நிறுவனத்தின் சாதனைகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் சாதனைகள், மாணவர்கள் முன்னேற்றம், சமூகப் பொறுப்பு முயற்சிகள் மற்றும் சமூகம், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகள் பற்றி எடுத்து உரைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *