டில்லி:
டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல் அமைச்சர் மனீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.
மனீஷ் சிசோடியா
மேலும் சிசோடியா தொடர்புடைய 21 இடங்களில் சிபிஐ சோதனையும் நடைபெற்றது. இதேபோல் மார்ச் மாதம், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கிலும் அவரை சி.பி.ஐ. கைது செய்தது. சிசோடியா ஊழலில் ஈடுபட்டிருந்தபோது 14 செல்போன்கள் மற்றும் 43 சிம்கார்டுகளை பயன்படுத்தியிருந்ததாகவும், ஆனால் விசாரணை தொடங்கியபோது இவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் விசாரணை அமைப்புகள் குற்றம்சாட்டின.
இந்தநிலையில் திகார் சிறையில் இருக்கும் சிசோடியா ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த மனு கடந்த மே மாதம் 30ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்ளை கலைத்துவிடுவார் என்று நீதிமன்றம் அச்சம் தெரிவித்தது. மேலும் இது தீவிரமான வழக்கு என்றும் நீதிபதிகள் கூறி இருந்தனர்.
ஜக்தீப் தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்” – ஜெயா பச்சன் எம்.பி
எனவே ஜாமீன் கோரி வேலடஉச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 6ம் தேதி வழக்கு விசாரணை முடிந்தது. தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
சிசோடியாவுக்கு ஜாமீன்
இதற்கிடையே இன்று(9ந்தேதி) இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது. அதில் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக கூறியது. இதனையடுத்து 17 மாதங்களுக்கு பிறகு சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைத்து இருந்தது.
மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் உற்சாகம் அடைந்தனர். அக்கட்சியின் முக்கி தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான அதிஷி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். பின்னர் பேசிய அவர், “இன்று உண்மை வென்றுள்ளது. டெல்லி மாணவர்கள் வென்றுள்ளனர். ஏழைக் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்கியதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்” என்று குறிப்பிட்டார்.
சிறையில் இருந்து வந்த சிசோடியா
இதைத்தொடந்து இன்று மாலை மனீஷ்சிசோடியா திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு ஆம்ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமானோர் திகார் சிறை வாசலில் இருந்து ஊர்வலமாக மனீஷ் சிசோடியாவை அழைத்துசென்றனர்.
முன்தாக தொண்டர்கள் மத்தியில் மனீஷ் சிசோடியா பேசும்போது, சர்வாதிகாரத்தால் சிறையில் அடைக்கப்பட்டேன். அரசியலமைப்பால் காப்பாற்றப்பட்டு உள்ளேன்.பாபா சாகேப்பின் அரசியல் சாசனத்தால் தான் சிறையிலிருந்து வெளியே வர முடிந்தது. இதேபோல் கெஜ்ரிவாலும் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்றார்.
அரவிந்த்கெஜ்ரிவால்
திகார் சிறையில் இருந்து வெளியே வந்த மனீஷ் சிசோடியா “பாரத் மாதா கி ஜெய், இன்குலாப் ஜிந்தாபாத்” என்று கோஷங்களை எழுப்பினார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும்
டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற தேர்தலின் போது அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்தது. பின்னர் அவர் மீண்டும் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்து இருந்த நிலையில் அமலாக்கத்துறையின் எதிர்ப்பால் அவர் ஜாமீன் ரத்தானது. அவரும் ஜாமீன் கேட்டு உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்தகது.