டெல்லி:
பாரீஸ் நகரில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கத்துடன் 64 வது இடத்தில் உள்ளது.
மனுபாக்கர் வாழ்த்து
இதில் துப்பாக்கிச்சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்கள் வீராங்கனை மனு பாக்கர் வென்று அசத்தினார். நாடுதிரும்பிய அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
சாதனை படைத்த மனுபாக்கர் அரசியல் கட்சியினரை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று(9ந்தேதி) மாலை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை, வீராங்கனை மனுபாக்கர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது அவருக்கு இனிப்பு கொடுத்து ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது மனுபாக்கரின் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் உடன் இருந்தனர்.