March 23.. திருத்தணி முருகன் கோவிலிலிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் சீமான்! – பின்னணி என்ன? | NTK Cheif Seeman Starts his Campaign from thiruttani murugan kovil

Spread the love

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை மார்ச் 23-ம் தேதி திருத்தணியிலிருந்து தொடங்குகிறார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, மாநாடு, வேட்பாளர் அறிவிப்பு, வாக்குறுதிகள் வெளியீடு என அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது. இச்சூழலில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் பிரசாரத்தையும் தொடங்குகிறார்.

நம்மிடம் பேசிய அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர்கள் சிலர் “பிப்ரவரி 21-ம் தேதி மாபெரும் மக்கள் மாநாட்டை நடத்தி அந்த மேடையிலேயே 234 வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டோம். கடந்த ஒருமாதமாக வேட்பாளர்கள் வீடு வீடாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.

சீமான் தேர்தல் பிரசாரம்

சீமான் தேர்தல் பிரசாரம்

இதற்கிடையில், நாம் தமிழர் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும், வேளாண்மை, ஆடு, மாடு வளர்த்தல் போன்றவை அரசு வேலையாக அறிவிக்கப்படும். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை, முழுமையான பூரண மதுவிலக்கு, உழவர்களே உணவு பொருட்களுக்கு விலை தீர்மானிக்கும் உரிமை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறோம். இச்சூழலில்தான் பிரசாரத்துக்கு கிளம்புகிறார் அண்ணன் சீமான்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *