இதுவரை உக்ரைன் போரினால் அமெரிக்காவும், ரஷ்யாவும் முட்டி மோதிக்கொண்டிருந்தன. இப்போது வெனிசுலா விஷயத்திலும் இந்த இரு நாடுகள் மோதிக்கொள்ள தொடங்கியுள்ளன.
நேற்று கரீபியன் கடல், வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இரு எண்ணெய் டேங்கர் கப்பல்களைக் கைப்பற்றியுள்ளது அமெரிக்கா. இந்த இரண்டு கப்பல்களும் முன்பு வெனிசுலாவிற்கு கீழ் இருந்து வந்தது.
இதனால், இந்தக் கப்பல்களில் வெனிசுலாவின் தடை செய்யப்பட்ட எண்ணெய் கொண்டுவரப்பட்டது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

இரண்டு கப்பல்களில் மரினேரா என்கிற எண்ணெய் டேங்கர் கப்பலால் தான் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இடையே பிரச்னை வெடித்துள்ளது.
முன்பு பெல்லா 1 என்று அழைக்கப்பட்ட மரினேரா கப்பல் கடந்த டிசம்பர் மாதம், ரஷ்யாவின் கீழ் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆக, இந்தக் கப்பலை அமெரிக்கா கைப்பற்றிய போது, மரினேரா கப்பலில் ரஷ்ய கொடி பறந்துகொண்டிருந்தது. இது தான் இரண்டு நாடுகளுக்கு இடையே மோதல்போக்கை உண்டாக்கி உள்ளது.