மருத்துவ மாணவி கொலையில் விடை கிடைக்காத 15 கேள்விகள்

Dinamani2f2024 08 132f5ba12q592fkolkatta20doctors20protest20edi.jpg
Spread the love

கொல்கத்தா:

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், நீதி கேட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் விடை கிடைக்காத 15 கேள்விகள் உள்ளன:

கொலை செய்த பிறகு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டாரா? அல்லது பாலியல் வன்கொடுமை செய்த பிறகு கொலை நடந்ததா?

குற்றம்சாட்டப்பட்டுள்ள சஞ்சய் ராயைத் தவிர வேறு யாரேனும் சம்பவ இடத்தில் இருந்தனரா? வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா? இதுபோன்ற கொடுமைகளை நிகழ்த்துவது தனி நபரால் சாத்தியமா?

கொல்கத்தா காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு இச்சம்பவத்தில் இரண்டாவது அல்லது மூன்றாவது நபர் ஈடுபடவில்லை என்பதில் உறுதியாக உள்ளதா?

மருத்துவ மாணவர்களிடையே ஆடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில் பயிற்சி மருத்துவர் ஒருவரும் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குணால் கோஷ் இதனை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 11) பகிர்ந்துள்ளார். இந்த ஆடியோ உண்மைதானா என்பதை காவல் துறை விசாரித்ததா? பயிற்சி மருத்துவரிடம் விசாரணை நடத்தியதா?

குற்றம் சாட்டப்பட்டுள்ள சஞ்சய் ராய், குடிபோதையில் மருத்துவர்களிடம் தவறாக நடந்துகொண்ட வரலாறும் ஏற்கெனவே உண்டு. அவருக்கு எதிராக ஏதேனும் புகார் பதிவாகியுள்ளதா? அப்படி புகார் எழுந்திருந்தால், நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?

கல்லூரி வளாகத்தில் சஞ்சய் ராய் குடித்துவிட்டு தவறாக நடந்துகொண்டது முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் அல்லது நிர்வாகத்திற்குத் தெரியாதா?

2 ஆண்டுகளுக்கு முன்பு, 3 மாத கர்ப்பிணியான தனது மனைவியை அடித்ததற்காக, குடும்ப வன்முறைப் பிரிவில் ராய் மீது காளிகாட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *