20.10.2024 அன்று நள்ளிரவில் சென்னை மெரினா Loop சாலையில் காவலர்களுடன் தகராறு செய்த சந்திரமோகன் தலைமறைவான நிலையில், அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார். அவர் தனது தவறினை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார்.
மன்னிப்பு கோரியுள்ளார்
சென்னை மெரினா லூப் சாலையில் நேற்று(20-ந்தேதி) நள்ளிரவில் தோழியுடன் காரில் வந்த வேளச்சேரியை சேர்ந்த சந்திரமோகன் என்பவர் மதுபோதையில் பாதுகாப்புக்கு நின்ற காவலர்களுடன் தகராறு செய்தார். மேலும் கையை முறுக்கி தரக்குறைவான வார்த்தைகளை பேசி அங்கிருந்து சென்று விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அவரை போலீசார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் சந்திரமோகன் அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார். அவர் தனது தவறினை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார். அந்த வீடியோவை சென்னை மாநகர போலீசார் தங்களது எக்ஸ் வளதலத்தில் பதிவிட்டு உள்ளது.
அந்த வீடியோவில் சந்திரமோகன் பேசும்போது, நேற்று கடற்கரையில் போலீசாரை தறக்குறைவாக பேசிவிட்டேன். துணை முதல்வர் உதயநிதிஸ்டாலினை தெரியாமல் சொல்லிவிட்டேன். மேலும் மெரினா பெண் இன்ஸ்பெக்டரை தெரியும் என்றுதெரியாமல் கூறிவிட்டேன். எனக்கு யாரையும் தெரியாது சும்மா சொல்லிவிட்டேன்.
நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இதுபோல் இனி செய்ய மாட்டேன் என்று கூறி உள்ளார்.
கவனித்து அனுப்பினர்
அந்த வீடியோவில் சந்திரமோன் பேசும்போது மிகவும் பதட்டத்துடன் இளைத்தபடி கூறுகிறார். வாய் சவடால் விட்ட அவரைபோலீசார் தங்களது பாணியில் கவனித்து அனுப்பி இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள். போதையில் யாரிடம் பேசுவது என்றுதெரிந்து பேச வேண்டும். இல்லையெனில் இப்படித்தான் வீணாகா தானே போய் சிக்க வேண்டி இருக்கும்.