`GOAT India Tour 2025″ என்ற திட்டத்தின்படி அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 13 ஆம் தேதி இந்தியா வந்தார்.
விமானம் மூலம் கொல்கத்தா வந்த அவருக்கு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்திருத்திருந்தனர்.
பிறகு கொல்கத்தாவில் சால்ட் லேக் மைதானத்துக்கு மெஸ்ஸி சென்றார். சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸியை காண தலா ரூ. 5,000 முதல் ரூ. 25,000 கட்டணமும் வசூலிக்கப்பட்டது.
ஆனால் மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி, சிறிது நேரத்திலேயே அங்கிருந்து சென்றுவிட்டார்.
மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் மெஸ்ஸியைச் சுற்றி இருந்ததால் மைதானத்தில் இருந்த ரசிகர்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை.
அவரை சரியாக பார்க்கக் கூட முடியவில்லை என்று கோபமடைந்த ரசிகர்கள் பொருட்களை எறிந்தும், மைதானத்திற்குள் புகுந்து ஏற்பாடுகளை சேதப்படுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்திற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டார். மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.