தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு எதிராகப் போட்டியிடத் தயாராகும் வகையில், நாள்தோறும் கால்பந்து பயிற்சி எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Messi: G.O.A.T India Tour
ஹைதராபாத்தில் வரும் டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள “G.O.A.T. இந்தியா டூர் 2025′ நிகழ்ச்சியின்போது மெஸ்ஸியுடன் முதல்வர் மோதவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த உலகக் கோப்பை சாம்பியன் மெஸ்ஸி, டிசம்பர் 13 முதல் 15 வரை கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லியில் நடக்கும் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார் என்கிறது மனோரமா செய்திதளம்.
பிரபலங்கள் பங்கேற்கும் போட்டிகள் (Celebrity Matches) மற்றும் பல வேடிக்கையான பொழுதுபோக்கு நிகழ்வுகளிலும் மெஸ்ஸி கலந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளனர்.