கர்நாடகத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியின் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(ஆக. 31) மாலை 4:00 மணிக்கு வினாடிக்கு 29,360 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 20,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 118.86அடியாகவும் நீர் இருப்பு 91.66 டிஎம்சியாக உள்ளது.